தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாடு- 6 மாதங்களாக தவிக்கும் மக்கள்

தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாடு- 6 மாதங்களாக தவிக்கும் மக்கள்
Updated on: 
1 min read

தாம்பரம்: ​தாம்​பரம் மாநக​ராட்​சி, மண்​டலம் 3-க்கு உட்​பட்ட பல்வேறு பகு​தி​களில் கடந்த ஆண்​டு​களை​விட இந்த ஆண்டு குடிநீர் தட்​டுப்​பாடு அதி​க​மாக இருப்​ப​தாக பொது​மக்​கள் தெரிவிக்​கின்​றனர்.

குறிப்​பாக வார்டு 41 மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள குடி​யிருப்​புப் பகுதி​களில் முறை​யான குடிநீர் விநி​யோகம் இல்​லாத​தால் பொதுமக்​கள் அத்​தி​யா​வசிய தேவை​களுக்​காக தண்​ணீரைத் தேடி அலை​யும் நிலை ஏற்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. பருவமழைக் காலத்தை கருத்​தில் கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்​ப​தற்​கான முன்​னெச்​சரிக்கை நடவடிக்கைகள் மண்​டலம் 3 பகு​தி​யில் போதிய அளவில் மேற்​கொள்​ளப்​பட​வில்லை என பொது​மக்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.

குடிநீர் தட்​டுப்​பாடு ஏற்​படும் பகு​தி​களை முன்​கூட்​டியே கண்டறிந்து மாற்று ஏற்​பாடு​களைச் செய்​திருக்க வேண்​டும் என்றும் அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர். செம்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள வார்​டு​களுக்கு தாம்​பரம் மாநக​ராட்சி சார்​பில் லாரி​கள் மூலம் குடிநீர் வழங்​கப்​படும் நிலை​யில், வார்டு 41 உள்​ளிட்ட தட்டுப்​பாடு நில​வும் பகு​தி​களுக்கு இது​வரை போதிய அளவில் குடிநீர் வழங்​கப்​பட​வில்லை என்​றும் பொது​மக்​கள் கூறுகின்​றனர்.

எனவே குடிநீர் தட்​டுப்​பாடு நில​வும் பகு​தி​களில் உடனடி​யாக லாரிகள் மூலம் குடிநீர் விநி​யோகம் செய்ய வேண்​டும். மேலும், தேவை​யான இடங்​களில் ஆழ்​துளைக் கிணறுகள் அமைத்து மாற்று குடிநீர் ஆதா​ரங்​களை ஏற்​படுத்த வேண்​டும். பொது​ மக்களின் அத்​தி​யா​வசி​யத் தேவையை கருத்​தில் கொண்​டு, குடிநீர் தட்​டுப்​பாட்டை விரைந்து தீர்க்க மாநக​ராட்சி அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்க பொது​மக்​கள் மற்​றும் நலச்​சங்​கங்​கள் சார்பில் கோரிக்​கை விடுக்​கப்​பட்​டு உள்​ளது.

தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாடு- 6 மாதங்களாக தவிக்கும் மக்கள்
சென்னை ஓஎம்ஆர் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு கார் உள்ளே விழுந்தது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in