பிரபாகரன் உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார்: பழ.நெடுமாறன் தகவல்

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.

Updated on
1 min read

தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் அமைப்​பின் தலை​வர் பிர​பாகரன் உரிய நேரத்​தில் பொது​வெளிக்கு வரு​வார் என உலகத் தமிழர் பேரமைப்​பின் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார்.

தஞ்​சாவூர் முள்​ளி​வாய்க்​கால் முற்​றத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: தஞ்​சாவூர் முள்​ளி​வாய்க்​கால் நினைவு முற்​றத்​தில் வரும் 26-ம்

​தே​தி, தஞ்​சாவூர் தமிழ்ப் பல்​கலைக்​கழகத்​தின் முதல் துணைவேந்​த​ரான முது​முனை​வர் வ.அய்​.சுப்பி​ரமணி​யம் நூற்​றாண்டு விழா நடை​பெற உள்​ளது.

உலகள​வில் தமிழ் மற்​றும் திரா​விட ஆய்​வுல​கில் முன்​னோடி​யாக​வும், தமிழுக்​கும், திரா​விட​வியலுக்​கும் தொண்​டாற்ற பல நிறு​வனங்​களை உரு​வாக்​கிய​வரும், உலகத் தமிழா​ராய்ச்சி மாநாடு​களை நடத்​தி​ய​தில் சிறப்​பான பங்கு வகித்​தவரு​மான வ.அய்​.சுப்​பிரமணி​யத்​தின் தன்​னிகரற்ற தமிழ்த் தொண்​டைப் போற்​றிப் பாராட்​டும் வகை​யில் இந்த விழா கொண்​டாடப்​படு​கிறது.

இதில், பல்​வேறு தமிழறிஞர்​கள் கலந்து கொண்டு உரை​யாற்ற உள்​ளனர். அவரது நூற்​றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு ஓராண்டு முழு​வதும் பல்​வேறு நிகழ்ச்​சிகளை நடத்த வேண்​டும். அனைத்து பல்​கலைக் கழகங்​களி​லும் வ.அய்​.சுப்​பரமணி​யம் தொடர்​பாக ஆராய்ச்சி இருக்கை அமைக்க வேண்​டும். தமிழகத்​தில் ஆளும் கட்​சி​யின் செயல்​பாடு எப்​படி உள்​ளது என்​பது குறித்து ஓராண்​டுக்கு பிறகு கருத்து கூறு​வது தான் சரி​யாக இருக்​கும்.

விடு​தலைப்​புலிகள் அமைப்​பின் தலை​வர் பிர​பாகரன் உயிரோடு​தான் இருக்​கிறார். இதை நான் 2009-ம் ஆண்டு முதல் தெரி​வித்து வரு​கிறேன். உரிய நேரத்​தில் அவர் வெளியே வரு​வார். தற்​போது வெளியே வரு​வதற்​கான சர்​வ​தேச சூழ்​நிலை இல்​லை. பிர​பாகரன் மகள் ஏற்​கெனவே தொலைக்​காட்சி முன்பு தோன்றி பேசி உள்​ளார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.</p></div>
சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் முதல் அமீர் வரை பேசியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in