கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

இடது: வி.எஸ்.பாபு |வலது: மு.க.ஸ்டாலின்

இடது: வி.எஸ்.பாபு |வலது: மு.க.ஸ்டாலின்

கோப்புப் படங்கள்

Updated on: 
1 min read

சென்னை: சென்னை கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியா் மருத்துவமனை ஒன்றில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பாபு மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவரது இழப்பு பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இடது: வி.எஸ்.பாபு |வலது: மு.க.ஸ்டாலின்</p></div>
ஒடிசாவை நோக்கி நகரும் அக்வான் புயல் - 1 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

X