அம்பத்தூர் தொகு​தி​யில் வெயிலுக்கு அசராமல் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

தாங்கல் குப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அ.பு.பூர்ணிமா.

தாங்கல் குப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அ.பு.பூர்ணிமா.

Updated on
2 min read

சென்​னை: தொழிற்​சாலைகள் நிறைந்த முக்​கிய தொகுதியான அம்​பத்​தூரில், இந்த முறை தேர்​தல் களம் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் விறு​விறுப்படைந்துள்​ளது. திமுக சார்​பில் அ.பு.பூர்​ணிமா முதல்​முறை​யாக சட்​டப்​பேரவை தேர்​தலில் களம் காண்​கிறார்.

அதி​முக கூட்​ட​ணி​யில் பாமக சார்​பில் கே.என்​.சேகர், நாம் தமிழர் கட்சி சார்​பில் தெ.க.சிலம்​பரசன், தமிழக வெற்றிக் கழகம் சார்​பில் ஜி.​பால​முரு​கன் மற்​றும் சுயேச்​சைகள் என 23 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

திமுக - வளர்ச்சி திட்​டங்​களுக்கு முன்​னுரிமை

திமுக வேட்​பாள​ரான அ.பு.பூர்​ணி​மா, கூட்​ட​ணிக் கட்சி நிர்வாகி​களு​டன் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். மேலும் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், கனி​மொழி எம்​.பி. தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​களும் பிரச்​சா​ரம் செய்துள்ளனர்.

அம்​பத்​தூரின் வளர்ச்​சிக்கு முன்​னுரிமை கொடுத்து திட்டங்​களைக் கொண்​டு வரு​வேன் என்று கூறி தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் கே.என்.சேகர்.

அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் கே.என்.சேகர்.

பாமக - அடிப்​படை வசதி​களை மேம்​படுத்த திட்​டம்

அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் பாமக சார்​பில் போட்​டி​யிடும் கே.என்​.சேகர், தொகு​திக்கு நன்கு அறி​முக​மானவர் என்ற பலத்​துடன் களமிறங்​கி​யுள்​ளார். மக்​களின் அன்​றாடத் தேவை​களை மையப்​படுத்தி பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

சாலை விரி​வாக்​கம் மற்​றும் ஆக்​கிரமிப்பு அகற்​றம், உள்​கட்​டமைப்பு சார்ந்த அடிப்​படை வசதி​களை மேம்​படுத்​து​வேன் என வாக்​குறுதி அளித்து வரு​கிறார்.

நாதக-சுகா​தா​ர​ குடிநீர், கல்​வி, மருத்​து​வம் இலவசம்

நாம் தமிழர் கட்சி சார்​பில் போட்​டி​யிடும் தெ.க.சிலம்​பரசன், “மக்​களுக்கு சுகா​தா​ர​மான குடிநீர், கல்வி மற்​றும் மருத்​து​வம் போன்​றவற்றை இலவச​மாக வழங்​கு​வோம்.

பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் தெ.க.சிலம்பரசன்.

பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் தெ.க.சிலம்பரசன்.

அடிப்​படை தேவை​களை பூர்த்தி செய்​வோம், மக்​களுக்​கான சேவை​களை மேம்​படுத்த எங்​களுக்​கும் ஒரு வாய்ப்பு கொடுங்​கள்” எனக் கூறி பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

தவெக-பெண்​களின் பாது​காப்​பு, நிர்​வாக மாற்​றம்

தவெக வேட்​பாளர் ஜி.​பால​முரு​கன், வாக​னப் பரப்​புரை, தெரு​முனை பிரச்​சா​ரம், பூங்​காக்​களில் மக்​களோடு மக்​களாக நடைபயணம் என உற்​சாகத்​துடன் வாக்கு சேகரித்து வரு​கிறார்.

தொண்டர்களுடன் வீதிகளில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஜி.பாலமுருகன். படங்கள்: ம.பிரபு

தொண்டர்களுடன் வீதிகளில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் ஜி.பாலமுருகன். படங்கள்: ம.பிரபு

திமுக அரசின் செயல்​பாடு​களை விமர்​சித்​தும், பெண்​களின் பாது​காப்பு மற்​றும் நிர்​​வாக மாற்​றத்தை முன்​னிறுத்​தி​யும் பிரச்​​சா​ரம் செய்து வரு​கிறார்.

வெயி​லின் தாக்​கம் கடுமை​யாக இருந்​​தாலும், அதனைப் பொருட்​படுத்​​தாமல் வேட்​பாளர்கள் சூறாவளி பிரச்​​சா​ரத்​தை தொடர்​ந்து வருகின்​றனர்​.

தாங்கல் குப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அ.பு.பூர்ணிமா.

மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in