முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருத்து

முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருத்து
Updated on
1 min read

பணி நிரந்தரம் வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர், பகுதிநேர ஆசிரியர்களை ஏமாற்றிவிட்டார். இனியும் பணி நிரந்தரம் செய்யாவிட்டால், வரும் தேர்தலில் திமுகவுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் பதிலடி கொடுப்பார்கள் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2016, 2021 ஆகிய தேர்தல்க ளின்போது பகுதிநேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய்வதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த பிறகு பணி நிரந்தரம் செய்யாமல் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களை வஞ்சித்துவிட்டது. கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவோரை பணி நிரந்தரம் செய்யாமல் கைவிட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது, தேர்தலில் திமுக வுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே காலமுறை ஊதியம், அரசின் சலுகைகள், பணப் பலன்கள் கிடைக்கும் என்ற நிலையில், பல ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை தொகுப்பூதியத்திலேயே தொடர வைப்பதை ஏற்க முடியாது.

தற்போது பெறும் ரூ.12,500 ஊதியத்துடன் ரூ.2,500 ஊதிய உயர்வு மற்றும் மே மாத ஊதியமாக ரூ.10,000 மற்றும் காலி பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டால், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என முதல்வர் தற்போது அறிவித்துள்ள அறிவிப்புகள் முழுக்க முழுக்க ஏமாற்றம் அளிக்கின்றன. பணி நிரந்தரம் கோரி ஜன.8-ல் தொடங்கி 17 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது .

போராட்டத்தின் போது உயிரிழந்த கண்ணன் குடும்பத்துக்கு நிவாரணம், வேலை இன்னும் வழங்கப்படவில்லை. திமுக அரசின் மீது பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஏற்பட் டுள்ள கோபத்தை முதல்வர் உணர்ந்து, உடனே பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் திமுகவுக்கு பகுதிநேர ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் தக்க பதிலடி கொடுப்பர்.

முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருத்து
44 காவல் துறையினருக்கு குடியரசு தின பதக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் ஆணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in