

ஜாபர் சித்திக்
பரமக்குடி: தன்னை அடித்து துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின்பேரில், பரமக்குடி டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி டிஎஸ்பியாக இருப்பவர் ஜாபர் சித்திக். இவர் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு தன்னை அடிக்கடி தாக்கி துன்புறுத்தியதாக, அவரது மனைவி சோபனா வேலூர் போலீஸில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், வேலூர் சிபிசிஐடி போலீஸார் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று இரவு உள்துறைச் செயலர், ஜாபர் சித்திக்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.