பூந்தமல்லி: பெண் தூய்மைப் பணியாளரை கொலை செய்து 8 பவுன் நகை திருட்டு

ஹேமாவதி

ஹேமாவதி

Updated on
1 min read

பூந்​தமல்லி: பெண் தூய்​மைப் பணி​யாளர் கொலை செய்​யப்​பட்​டு, 8 பவுன் நகை திருடப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக இளைஞரிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி, மற்​றொரு​வரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், திரு​வேற்​காடு, அன்​னலட்​சுமி நகர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஹேமாவ​தி(55). இவர், பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யின் வளசர​வாக்​கம் மண்​டலத்​தில் தூய்​மைப் பணி​யாள​ராக பணிபுரிந்து வந்​தார்.

இவரது கணவர் சில ஆண்​டு​களுக்கு முன்பு இறந்​து​விட்​டார்; மகன் மணி​கண்​டன் திரு​மண​மாகி தனி​யாக வசித்து வரு​கிறார். இதனால் தனி​யாக வசித்து வந்த ஹேமாவ​தி, கடந்த 2 தினங்​களாக வீட்​டிலிருந்து வெளியே வராத நிலை​யில் நேற்று காலை அவரது வீட்​டிலிருந்து துர்​நாற்​றம் வீசி​யது.

இதுகுறித்த புகாரின் பேரில் திரு​வேற்​காடு போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​து, ஹேமாவ​தி​யின் வீட்​டைத் திறந்து பார்த்​த​போது, ஹேமாவதி உடல் அழுகிய நிலை​யில் கிடந்​தது தெரிய வந்​தது.

இதையடுத்து உடலைக் கைப்​பற்றி பிரேதப் பரிசோதனைக்​காக அனுப்​பி​வைத்​தனர்.‌ இதுகுறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர்.

அதில், ஹேமாவ​தி​யின் வீட்​டுக்கு கடைசி​யாக வந்து சென்​றவர்​கள், அதே பகு​தி​யைச் சேர்ந்த நித்​திஷ் (25), அவரது நண்​ப​ரான, விழுப்​புரம் மாவட்​டம், மேல்​மலை​யனூரை சேர்ந்த ஆகாஷ் (30) ஆகியோர் என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து போலீ​ஸார் நடத்​திய தீவிர தேடு​தல் வேட்​டை​யில் நித்​திஷ் சிக்​கி​னார். அவரிடம் போலீ​ஸார் தீவிரமாக விசா​ரித்து வரு​கின்றனர்.நித்​திஷிடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் தெரிய​வந்​த​தாவது:

திரு​வேற்​காடு, அன்​னலட்​சுமி நகர் பகு​தி​யில் உள்ள ஒரு கோயிலுக்கு உடுக்கை அடிக்க சமீபத்​தில் ஆகாஷ் வந்​துள்​ளார்.

இதனையறிந்த ஹேமாவ​தி, தான் கட்​டி​யுள்ள கோயிலுக்​கும் ஆகாஷை உடுக்கை அடிக்க அழைத்து வரு​மாறு நித்​திஷிடம் கேட்​டுள்​ளார்.

ஹேமாவதி தனி​யாக இருப்​ப​தை​யும், அவரிடம் அதிக நகைகள் இருப்​ப​தை​யும் அறிந்த நித்​திஷ், ஆகாஷுடன் சேர்ந்து அவற்றை திருட திட்​ட​மிட்​டார்.

அதன்​படி ஆகாஷ், நித்​திஷ் இரு​வரும், 2 தினங்​களுக்கு முன்பு ஹேமாவதி வீட்​டுக்​குள் நுழைந்​து, அவரது முகத்தை தலை​யணை​யால் அழுத்தி கொலை செய்​து​விட்​டு, 8 பவுன் நகையை திருடிச் சென்​றுள்​ளனர்.

இவ்​வாறு விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ள​தாக போலீ​ஸார் கூறினர். ஆகவே நகைகளு​டன் தலைமறை​வாக உள்ள ஆகாஷை தனிப்​படை அமைத்து போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

ஆகாஷ் கைது செய்​யப்​பட்​ட பிறகு​தான்​ முழு​மை​யான விவரங்​கள்​ தெரிய​வரும்​ என, போலீ​ஸார்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>ஹேமாவதி</p></div>
தொகுதி பிரச்சினைகளைப் பேச எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை: பிரேமலதா விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in