எம்எல்ஏக்களுக்கு ரூ.34 லட்சத்தில் வாகனம்? - தலைமைச் செயலகத்தில் மாடல் கார்கள் அணிவகுப்பு

எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்கப்பட உள்ளன. இதன் தேர்வுக்காக தலைமைச் செயலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டு புதிய கார்கள்.

எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்கப்பட உள்ளன. இதன் தேர்வுக்காக தலைமைச் செயலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டு புதிய கார்கள்.

Updated on
1 min read

சென்னை: எம்​எல்​ஏ.க்​களுக்கு ரூ.34 லட்​சத்​தில் வாக​னம் வழங்​கப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதற்காக புதிய கார்கள் தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.

தமிழகத்​தில் அனைத்து எம்​எல்​ஏ.க்​களுக்​கும் அரசு சார்​பில் கார் வழங்​கப்​படும். தனி உதவி​யாளர் மற்​றும் ஓட்​டுநருக்​கான ஊதி​யம், எரிபொருள் படி ஆகிய​வற்​றுக்​காக மாதம் ரூ.1 லட்​சம் கூடு​தலாக வழங்​கப்​படும் என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் நேற்று முன்​தினம் அறி​வித்​தார்.

அதை செயல்​படுத்​து​வதற்​கான பணி​கள் தற்​போது முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன. அதன்​படி, தனி​யார் நிறு​வனத்​தின் 6 வித​மான கார்​களின் மாடல்​கள் தலை​மைச் செயலக வளாகத்​துக்கு நேற்று மாலை கொண்டு வரப்​பட்​டன.

அவற்றை அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். இதுத​விர இன்​னும் சில தனி​யார் நிறு​வனங்​களின் கார் மாடல்​களும் அடுத்து கொண்​டுவர இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இந்த மாடல் கார்​கள் டெஸ்ட் டிரைவ் செய்​யப்​பட்டு தகு​தி​யானதை தேர்வு செய்ய உள்​ளனர். தேர்வு செய்​யப்​படும் மாடலில் 234 கார்​கள் வாங்​கு​வதற்கு தமிழக அரசு முடிவு செய்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

குறைந்​த​பட்​சம் ரூ.20 லட்​சம் முதல் ரூ.34 லட்​சம் வரை விலை​யில் கார்​கள் வாங்​கப்பட உள்​ள​தாக தகவல்​கள்​ வெளி​யாகி​யுள்​ளன.

<div class="paragraphs"><p>எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனம் வழங்கப்பட உள்ளன. இதன் தேர்வுக்காக தலைமைச் செயலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டு புதிய கார்கள்.</p></div>
தமிழகம் - ஆந்திரா இடையே சுமுகமாக மீன் பிடிக்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in