நவ.12-ல் தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை கட்சியினர் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்: பழனிசாமி அறிவுறுத்தல்

நவ.12-ல் தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை கட்சியினர் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்: பழனிசாமி அறிவுறுத்தல்
Updated on: 
1 min read

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவ.12-ல் தொடங்​கும் நிலை​யில், அப்​பணியை அதிமுக​வினர் பொறுப்​புணர்​வோடு மேற்​கொள்ள வேண்​டும் என்று பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி அறி​வுறுத்​தி​ உள்​ளார்.

இது​தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை: இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யத்​தின் அறி​வுறுத்​தல்​படி, வரும் ஜன.1-ம் தேதி தகுதி ஏற்​படுத்​தும் நாளாகக்​கொண்டு, புகைப்​பட வாக்​காளர் பட்​டியல்​களின் சிறப்பு திருத்​தப் பணிகள் நடை​பெற உள்​ளது. அதன்​படி, நவ.12-ம் தேதி ஒருங்​கிணைந்த வரைவு வாக்காளர் பட்​டியல் வெளி​யிடப்​படு​கிறது.

நவ.12 முதல் டிச.11-ம் தேதி வரை ஏற்​புரைகள் மற்​றும் மறுப்​புரைகளை (திருத்​தம் கோரி) விண்​ணப்​பிக்​கலாம். ஏற்​புரைகள் மற்​றும் மறுப்​புரை விண்​ணப்​பங்​கள் வழங்​கு​வதற்​கான சிறப்பு முகாம்​கள நவ.21, 22, 28, 29 ஆகிய தேதி​களில் நடை​பெற உள்​ளன. இறுதி வாக்​காளர் பட்​டியல் ஜன.4-ம் தேதி வெளி​யிடப்​பட உள்​ளது.

மிகவும் முக்​கியத்​து​வம் வாய்ந்த இப்​பணி​யில், தலை​மைக் கழக நிர்​வாகி​கள், மாவட்டச் செய​லா​ளர்​கள் உள்​ளிட்ட கட்​சி​யின் பல்​வேறு நிலைகளில் பணி​யாற்றி வரும் நிர்​வாகி​களும், உள்​ளாட்சி அமைப்​பு​களின் இந்​நாள், முன்​னாள் பிரதி​நி​தி​கள், தொண்​டர்​கள், வாக்​குச்​சாவடி நிலை முகவர்​களும் தனிக் கவனம் செலுத்த வேண்​டும்.

இந்த ஒரு மாதத்​தில் 18 வயது பூர்த்​தி​யானவர்​கள், 17 வயதுக்கு மேற்​பட்ட இளைஞர்​களை​யும், இளம் பெண்​களை​யும், வாக்​காளர் பட்​டியலில் சேர்க்க வேண்​டும்.

ஒரு நபரின் பெயர் ஒன்​றுக்கு மேற்​பட்ட தொகுதி​களில் அல்​லது ஒரே தொகுதி​யில் ஒன்​றுக்கு மேற்​பட்ட முறை பதிவு செய்​யப்​பட்​டுள்​ளதை அடை​யாளம் கண்டு நீக்​கவும், வெளியூர்​களுக்கு இடம்​பெயர்ந்​தவர்​கள் மற்​றும் இறந்​தவர்​களின் பெயர்​களை தற்​போதுள்ள வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கவும், வாக்​காளர் பட்​டியலில் உள்ள தவறுகளை சரிசெய்​வதற்​கும் தேவை​யான படிவங்​களைப் பெற்று, பூர்த்தி செய்து, சிறப்பு முகாம்​களில் வழங்கி இப்​பணியை முழு​மையாகச் செய்து முடிக்க வேண்​டும்.

அதேபோல் வாக்​காளர் பட்​டியல் சரிபார்ப்​புப் பணிகளில் அத்து​ மீறல்​கள் ஏதேனும் இருப்​ப​தாகத் தெரிய​வந்​தால், உடனுக்​குடன் அது​தொடர்​பான புகார்​களை சம்​பந்​தப்​பட்ட தேர்​தல் அதி​காரி​யிடம் கொடுத்து உரிய தீர்​வு​காண வேண்​டும்.

அதிமுக சார்​பில் வாக்​குச்​சாவடி நிலை முகவர்​கள் நியமிக்​கப்​படாத வாக்​குச்​சாவடிகளில், உடனடி​யாக நியமித்து, அந்​தந்த மாவட்​டத் தேர்​தல் அதி​காரி​களுக்கு பட்​டியலை சமர்ப்​பிக்க வேண்​டும்.

மாவட்டச் செய​லா​ளர்​கள் மற்​றும் நிர்​வாகி​கள், சிறப்பு முகாம் நடை​பெறும் நாட்​களில் கட்சி சார்​பில் ஆங்​காங்கே வாக்​காளர்​களை சேர்த்​தல், நீக்​கல், திருத்​தல் உள்​ளிட்ட பணிகளை முனைப்​போடு மேற்​கொள்​வதற்​கான ஏற்​பாடுகளை செய்ய வேண்​டும்.

மிகவும் முக்​கியத்​து​வம் வாய்ந்த இப்​பணியை கட்சி நிர்​வாகி​களும், தொண்​டர்​களும் மிகுந்த பொறுப்​புணர்​வோடு முழு வீச்​சில் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நவ.12-ல் தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை கட்சியினர் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்: பழனிசாமி அறிவுறுத்தல்
புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in