பாலமேடு வாடிவாசலை அதிரவைத்த காளைகள்: தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசு

மதுரை பாலமேடு வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வெளியேறிய காளை.

மதுரை பாலமேடு வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வெளியேறிய காளை.

Updated on
1 min read

மதுரை: ​பாலமேட்​டில் நேற்று நடந்த ஜல்​லிக்​கட்​டில் ஆக்​ரோஷ​மாக களமாடிய காளை​கள், அவற்றை அடக்​கிய மாடு​பிடி வீரர்​களின் தீரத்​தைக் கண்டு பார்​வை​யாளர்​கள் மெய்​சிலிர்த்​தனர்.

மதுரை பாலமேட்​டில் நேற்று நடை​பெற்ற ஜல்​லிக்​கட்​டுப்போட்​டி​யில் தென்தமிழகம் முழு​வது​மிருந்து கொண்டுவரப்பட்ட 1,000 காளை​கள் களமிறக்கப்பட்டன. 600 மாடு​பிடி வீரர்​கள் பங்​கேற்​றனர். வழக்​க​மாக மணிக்​குள் தொடங்​கும் போட்டி சற்று தாமத​மாகத் தொடங்​கியது.

அமைச்​சர் பி.மூர்த்தி முன்​னிலை​யில், துணை முதல்​வர் உதயநிதி கொடியசைத்து போட்​டியைத் தொடங்​கி​வைத்​தார். பின்​னர், அவர் ஒரு மணி நேரம் அரங்​கில் அமர்ந்​து, ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், நடிகர் சூரி, ஜல்​லிக்​கட்​டுப் பேர​வைத் தலை​வர் ராஜசேகர் ஆகியோ​ருடன் போட்​டியை ரசித்​தார். மேலும், சிறப்​பாக காளை​களை அடக்​கிய வீரர்​கள், சிக்​காமல் சென்ற காளைகளின் உரிமை​யாளர்​களுக்கு தங்க மோதிரங்​களை பரி​சாக வழங்​கி​னார்.

ஒவ்​வொரு சுற்​றி​லும் தலா 100 காளை​கள் அவிழ்க்​கப்​பட்​டன. சுற்​று​வாரி​யாக அதிக காளை​களை அடக்​கிய வீரர்​கள் அடுத்​தடுத்த சுற்​றுக்​குத் தேர்​வாகினர். பார்​வை​யாளர்​கள் ஜல்​லிக்​கட்டை கண்டு ரசிக்க, வாடி​வாசலில் இருந்து ஒரு கி.மீ. தொலை​வுக்கு இரு​புறங்​களி​லும் கேலரி​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன.

உள்​ளூர் பார்​வை​யாளர்​கள், சுற்​றுலாப் பயணி​கள் மற்​றும் அதி​காரி​கள், விஐபிகளுக்கு தனித்​தனி​யாக அமைக்​கப்​பட்ட கேலரி​யில் அமர்ந்து ஜல்​லி்க்​கட்​டைப் பார்​வை​யிட்​டனர். காளை​களை அடக்​கிய வீரர்​களுக்​கும், பிடிப​டாத காளை​களுக்​கும் ஒவ்​வொரு சுற்​றி​லும் தங்​க​காசு பீரோ, கட்​டில், தங்க நாண​யம், வெள்​ளிக்​காசுகள், மெத்​தை, டிவி, வாஷிங் மிஷின், மிக்​ஸி, கிரைண்​டர் போன்ற ஏராள​மான பரிசுகள் வழங்​கப்​பட்​டன. வாடி​வாசல் அருகே 12 ஆம்​புலன்​ஸ்​களும் தயார் நிலை​யில் நிறுத்​தப்​பட்​டிருந்​தன.

தென்​மண்டல ஐ.ஜி. விஜயேந்​திர பிதாரி மேற்​பார்​வை​யில், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அரவிந்த் தலை​மை​யில் 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அவனி​யாபுரம் ஜல்​லிக்​கட்டு மதுரை அவனி​யாபுரத்​தில் பொங்​கலன்று நடந்த ஜல்​லிக்​கட்​டில் 986 காளை​கள் பங்​கேற்​றன. 573 மாடு​படி வீரர்​கள் பங்​கேற்​றனர். இதில் 22 காளை​களை அடக்​கிய மதுரை வலை​யங்​குளத்தை சேர்ந்த பால​முரு​க​னுக்கு முதல்​வர் ஸ்டா​லின் சார்​பில் கார் பரி​சு வழங்​கப்​பட்​டது.

சிறப்​பாக விளை​யாடி பார்​வை​யாளர்​களைக் கவர்ந்த அவனி​யாபுரம் முத்​துக்​கருப்​பன் காளையின் உரிமையாளருக்கு, துணை முதல்​வர் உதயநிதி சார்​பில் டிராக்​டர் பரி​சாக வழங்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>மதுரை பாலமேடு வாடிவாசலில் இருந்து துள்ளிக்குதித்து வெளியேறிய காளை. </p></div>
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜக - சிவ சேனா கூட்டணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in