கூட்டணி பேச்சு குழு அமைத்தது மார்க்சிஸ்ட்: பெ.சண்முகம் அறிவிப்பு

பெ.சண்முகம்

பெ.சண்முகம்

Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி லாவண்யா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், லாவண்யா மதமாற்றம் செய்யப்படவில்லை. மேலும், பள்ளியில் படித்து வெளியேறிய யாரும் மதமாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவலை தெரிவித்து மக்கள் மத்தியில் பகையை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்புத் தொகை உயர்த்தப்படவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்திய அளவில் மிகக்குறைவான பராமரிப்புத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது. பராமரிப்புத் தொகையை உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை நள்ளிரவில் கைது செய்து அலைக்கழித்தது மிகப் பெரிய மனித உரிமை மீறலாகும். இதற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நான் (பெ.சண்முகம்), மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், தேர்தல் அறிக்கை தொடர்பாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி தலைமையில், செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், டி.ரவீந்திரன், ஜி.சுகுமாறன், முத்துக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. எனவே, திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை பேச்சுவார்த்தை குழு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>பெ.சண்முகம்</p></div>
“கோவை ஈஷா விழாவில் வேலுமணியுடன் பேசியது என்ன?” - பிரேமலதா விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in