ஓட்டல், கிளப் பார் உரிமக் கட்டண உயர்வுக்கு கால அவகாசம் தேவை: உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ஹோட்​டல், கிளப் பார்​களுக்​கான உரிமக் கட்டண உயர்வு முடிவை நடை​முறைப்​படுத்​து​வ​தில் கால அவகாசம் வழங்க வேண்​டும். உரிமங்​களை எளி​தாக பெற ஒற்றை சாளர முறையை அமல்​படுத்த வேண்​டும் என அரசுக்​கு, தமிழ்​நாடு ஓட்​டல் மற்​றும் கிளப் உரிமை​யாளர்​கள் சங்​கம் வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இது தொடர்​பாக, சங்​கத்​தின் தலை​வர் சி.சர​வணன், பொதுச்​செய​லா​ளர் பிர​காஷ் ஆகியோர், சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் மனமகிழ் மன்​றம், தனி​யார் நட்​சத்​திர விடு​தி, சர்​வ​தேச கிளப்​களில் மொத்​தம் 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பார்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. இவற்றுக்கு எஃப்​.எல்​-2, எஃப்​.எல்​-3, 3ஏ உரிமங்​கள் வழங்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், சென்​னை​யில் எஃப்​.எல்-2 உரிமத்​துக்​கான ஆண்டு கட்​ட​ணம் ரூ.15 லட்​சத்​தில் இருந்து ரூ.30 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. சென்னை தவிர்த்த பிற மாவட்​டங்​களுக்கு மக்​கள் தொகைக்கு ஏற்ப ரூ.25 லட்​சம், ரூ.15 லட்​சம் என கட்​ட​ணங்​கள் மாற்​றியமைக்​கப்​பட்​டுள்​ளன.

ஏற்​கெ​னவே, இந்த ஆண்​டுக்​கான முழு கட்​ட​ண​மாக ரூ.15 லட்​சத்தை கடந்த பிப்​ர​வரி, மார்ச் மாதங்​களி​லேயே நாங்​கள் செலுத்​தி​விட்​டோம். தற்​போது, ஜூன் மாதத்​தில் அரசாணை வெளி​யிட்​டு, அதனை ஏப்​ரல் மாதத்​தில் இருந்தே கணக்​கிட்​டு, விடு​பட்ட மீதி ரூ.15 லட்​சத்தை ஆகஸ்ட் மாதத்​துக்​குள் உடனடி​யாக கட்ட வேண்​டும் என நெருக்​கடி தரு​கின்​றனர்.

இதையொட்​டி, தேர்​தலுக்கு முன்​பும், பின்​னரும் எஃப்​.எல்​-2, எஃப்​.எல்-3 உரிமங்​களுக்​கான விண்​ணப்​பங்​களும் நிலு​வை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அந்த வகை​யில், புதிய ஆட்சி பொறுப்​பேற்ற இந்த 50 நாட்​களில் இது​வரை ஒரு புதிய உரிமம் கூட வழங்​கப்​பட​வில்​லை.

இதனால் சிறு மற்​றும் நடுத்தர ஓட்​டல், கிளப் உரிமை​யாளர்​கள் வாடகை மற்​றும் ஊழியர்​களுக்கு சம்​பளம் கொடுக்க முடி​யாமல் பொருளா​தார சுமையை சந்​தித்து வரு​கின்​றனர். எனவே, தமிழக அரசு இக்​கட்டண உயர்வை உடனடி​யாக நடை​முறைப்​படுத்​தாமல், குறைந்​தது 6 மாதங்​கள் முதல் ஓர் ஆண்டு வரை கால அவகாசம் வழங்க வேண்​டும்.

நிலு​வை​யில் உள்ள புதிய உரிமங்​களுக்​கான விண்​ணப்​பங்​களை​யும், புதுப்​பித்​தல் கோப்​பு​களை​யும் விரைந்து பரிசீலித்து உரிமங்​களை வழங்க வேண்​டும். தமிழகத்​தில் ஒரு ஓட்​டல் அல்​லது கிளப் பாருக்கு கிட்​டத்​தட்ட 20 உரிமங்​கள் பெற வேண்​டி​யுள்​ளது.

இதற்கு 2 ஆண்​டு​கள் வரை ஆகின்​றன. அண்டை மாநிலங்​களான புதுச்​சேரி, கர்​நாடகா மற்​றும் ஆந்​தி​ரா​வில் 30 முதல் 45 நாட்​களுக்​குள் ஒற்றை சாளர முறை​யில் உரிமங்​கள் வழங்​கப்​படு​கின்​றன.

அதே போன்ற எளிய முறையை, தமிழகத்​தி​லும் அமல்​படுத்த வேண்​டும். வணிக நேரத்​தை​யும் மதி​யம் 12 முதல் இரவு 12 மணி வரை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in