மின் கம்பி வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு: ஒரே ஐபி முகவரியில் டெண்டர் விண்ணப்பங்கள்

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தகவல்
மின் கம்பி வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு: ஒரே ஐபி முகவரியில் டெண்டர் விண்ணப்பங்கள்
Updated on
2 min read

சென்னை: மின்​சார வாரி​யத்​தில் மின் கம்​பிகள் கொள்​முதல் செய்​த​தில் முறை​கேடு நடை​பெற்​றது எப்​படி என லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு மின்​பகிர்​மான கழகத்​தில் 2020-21 முதல் 2022-23 வரையி​லான நிதி​யாண்​டு​களில் மின் கம்​பிகள் கொள்​முதல் செய்​த​தில் பல கோடி ரூபாய் முறை​கேடு நடை​பெற்​ற​தாக எழுந்த புகாரின் அடிப்​படை​யில், லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. இதுதொடர்​பாக கடந்த 19-ம்தேதி மின்​பகிர்​மானக் கழக ஊழியர்​கள், மின் கம்பி உற்​பத்தி நிறு​வனங்​கள் மற்​றும் ஒப்​பந்​த​தா​ரர்​களின் அலு​வல​கங்​கள் என 60 இடங்​களில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

இந்​நிலை​யில், இந்த முறை​கேடு தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸார் பதிவு செய்​துள்ள முதல் தகவல் அறிக்​கை​யில் (எஃப்​ஐஆர்.) இடம்​பெற்​றுள்ள தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

அதன் விவரம் வரு​மாறு: விசா​ரணைக்கு உட்​படுத்​தப்​பட்ட 9 டெண்​டர்​களில் மொத்​தம் 2 லட்​சத்து 7,495 கி.மீ. நீள மின்​கம்​பிகளை கொள்​முதல் செய்ய, ரூ.1,000 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​பில் ஒப்​பந்​தங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதில், 2022-23 நிதி​யாண்​டில் குறிப்​பிட்ட வகை மின் கம்​பிகளை கொள்​முதல் செய்ய சுமார் ரூ.170 கோடி மதிப்​பில் 40 ஆயிரம் கி.மீ. மின்​கம்​பிகள் வாங்க டெண்​டர் கோரப்​பட்​டது.

இதில் 24 நிறு​வனங்​கள் பங்​கேற்ற நிலை​யில், 5 நிறு​வனங்​கள் ஒரு கி.மீட்​டருக்கு ரூ.44,356.20 என ஒரே விலையை குறிப்​பிட்​டிருந்​தன. பின்​னர் நடத்​தப்​பட்ட பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு ரூ.41,536 என இறுதி விலை நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், அரசின் மதிப்​பீட்​டின் ​படி இதன் அடக்​க​விலை ரூ.38,858.07 மட்டுமே. இது இறுதி செய்​யப்​பட்ட விலை​யை ​விட 6.89 சதவீதம் குறைவு ஆகும். இருப்​பினும், 24 நிறு​வனங்​களுக்​கும் ரூ.166 கோடி மதிப்​பிலான கொள்​முதல் ஆணை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இதே​போன்​று, 2020-21-ம் ஆண்​டில் ரூ.107.74 கோடி மதிப்​பில் 15,000 கி.மீ. ஏசிஎஸ்​ஆர் (ACSR) வகை மின் கம்​பிகள் கொள்​முதல் செய்ய டெண்​டர் கோரப்​பட்​டது. இதில் தகு​திபெற்ற 31 நிறு​வனங்​களும் பைசா மாறாமல் கி.மீட்​டருக்கு ரூ.75,048 என்ற ஒரே தொகையை குறிப்​பிட்​டிருந்​தன. பேச்​சு​வார்த்​தைக்கு பின் ரூ.74,340 என விலை நிர்​ண​யம் செய்​யப்​பட்​டது. ஆனால், இதற்​கான அரசு மதிப்​பீட்டு விலை ரூ.71,826.66 மட்​டுமே.

நிர்​ண​யிக்​கப்​பட்ட விலை மதிப்​பீட்டை விட 3.49 சதவீதம் அதி​கம் இருந்​த​போ​தி​லும், 30 நிறு​வனங்​களுக்கு ரூ.111.51 கோடி மதிப்​பிலான கொள்​முதல் ஆணை​கள் வழங்​கப்​பட்​டன. மேலும், சில டெண்​டர்​களில் பல்​வேறு நிறு​வனங்​கள் சமர்ப்​பித்த ஏல விண்​ணப்​பங்​கள் ஒரே அல்​லது ஒரே மாதிரி​யான ஐபி (IP) முகவரி​களில் இருந்து தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக முதல்​கட்ட ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

கொள்​முதல் செய்​யப்​பட்ட சில வகை மின் கம்​பிகள் தரம் குறைந்​தவை​யாக இருந்​த​தால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக​வும் எஃப்​ஐஆர்​-ல் கூறப்​பட்​டுள்​ளது. முதல் தகவல் அறிக்​கை​யில் யாருடைய பெயரும், நிறு​வனங்​களின் பெயர்​களும்​ குறிப்​பிடப்​பட​வில்​லை.

மின் கம்பி வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு: ஒரே ஐபி முகவரியில் டெண்டர் விண்ணப்பங்கள்
கோயில் பணியாளர் தேர்வுக்கு புதிய வாரியம்: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in