ஆர்டிஐ மனுக்களுக்கு சரியான தகவல் தர உத்தரவு

ஆர்டிஐ மனுக்களுக்கு சரியான தகவல் தர உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் (ஆர்​டிஐ) கேட்​கப்​படும் கேள்​வி​களுக்கு உரிய காலக்​கெடுவுக்​குள் சரியான தகவலை வழங்க வேண்​டும் என்று அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இது​குறித்து பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கும் அனுப்​பப்​பட்​ட சுற்​றறிக்கை:

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த இரா.கோபிநாத் என்​பவர், திரு​வண்​ணா​மலை ஆட்சி​யர் அலு​வலக குறைதீர்க்​கும் கூட்​டத்​தில் தான் அளித்த மனுக்​கள் மீது எடுக்​கப்​பட்ட நட​வடிக்​கைகள் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்​டிருந்தார்.

ஆனால், திரு​வண்ணா​மலை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலக பொதுத் தகவல் அலு​வலரால் வழங்​கப்பட்ட தகவல்​கள் திருப்தி அளிக்காததால், அவர் மாநில தகவல் ஆணை​யத்தில் மேல்​முறையீடு செய்தார். இதை விசா​ரித்த தகவல் ஆணை​யம், செப்.24 அன்று ஒரு உத்​தரவைப் பிறப்​பித்​தது.

அதன்​படி இனி வருங்​காலங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்​டத்​தின் மூலம் பெறப்​படும் மனுக்​களுக்கு உரிய தகவலை குறித்த காலத்​துக்​குள் மனுதா​ரர் திருப்தி அளிக்​கும் வகை​யில் வழங்​க வேண்​டும் என்று உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்த நடைமுறையை அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களும் தவறாமல் பின்​பற்ற வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

ஆர்டிஐ மனுக்களுக்கு சரியான தகவல் தர உத்தரவு
காவலர் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி காப்பீட்டு நிதி: வீரவணக்க நாளில் முதல்வர் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in