காவலர் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி காப்பீட்டு நிதி: வீரவணக்க நாளில் முதல்வர் வழங்கினார்

காவலர் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி காப்பீட்டு நிதி: வீரவணக்க நாளில் முதல்வர் வழங்கினார்
Updated on: 
1 min read

சென்னை: பணி​யின்​போது உயி​ரிழந்த 6 காவலர்​கள் மற்றும் கோமா நிலை​யில் உள்ள ஒரு காவலர் என 7 காவலர் குடும்​பங்​களுக்கு விபத்​துக் காப்​பீட்​டுத் தொகை ரூ.5.96 கோடிக்​கான ஆணைகளை காவலர் வீரவணக்க நாளையொட்டி, முதல்​வர் விஜய் வழங்​கினார்.

லடாக்​கில் சீனப் படைகள் 1959-ம் ஆண்டு நடத்​திய தாக்​குதலில் வீரமரணம் அடைந்த மத்​திய ரிசர்வ் போலீஸ் படை​யின் 10 வீரர்​கள் மற்​றும் தமிழக காவல் துறை​யில் பணி​யின்​போது உயி​ரிழந்த காவலர்​களின் தியாகத்​தைப் போற்றி ஆண்​டுதோறும் அக்.21-ம் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்​கப்​படுகிறது.

இதை​யொட்டி, டிஜிபி அலு​வலக வளாகத்​தில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில், காவலர் நினைவுச்சின்​னம் முன்பு முதல்​வர் விஜய் மலர் வளை​யம் வைத்து மரியாதை செலுத்​தினார். காவல் துறை​யினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்​றார். பின்னர் மரக்​கன்​றையும் நட்டு வைத்​தார். முன்​னதாக, டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால், முப்​படை அதி​காரி​கள், ஓய்வு பெற்ற காவல் துறை அதி​காரி​களும் மரியாதை செலுத்​தினர்.

இதைத் தொடர்ந்து, தமிழக காவல் துறை​யில் பணி​யின் போது உயி​ரிழந்த 6 காவலர்​கள் மற்​றும் கோமா நிலை​யில் உள்ள ஒரு காவலர் என மொத்தம் 7 பேரின் குடும்​பங்​களுக்கு, அரசின் சம்​பளத் தொகுப்​புத் திட்​டத்​தின்​கீழ் தனிநபர் விபத்​துக் காப்​பீட்​டுத் தொகை​யாக ரூ.5.96 கோடிக்​கான ஆணைகளை முதல்​வர் வழங்​கினார். தமிழகத்​தைச் சேர்ந்த 6 பேர் உள்​பட நாடுமுழு​வதும் 154 காவலர்​கள், அதி​காரி​கள் பணி​யின்​போது உயி​ரிழந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

மேலும் நிகழ்​வின்​போது, டிஜிபி அறைக்கு முதல்​வர் விஜய் சென்​றார். அவரை தனது இருக்​கை​யில் அமரு​மாறு டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் கேட்​டுக் கொண்​டார். அதை மறுத்து, டிஜி​பியை அவரது இருக்​கை​யிலேயே அமர வைத்த முதல்​வர், எதிர் இருக்​கை​யில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார். உள்​துறை செயலர் ஏ.கார்த்​திக், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உள்​ளிட்ட அதி​காரி​கள் உடன் இருந்​தனர்.

இதையொட்டி முதல்​வர் நேற்று வெளி​யிட்ட வலை​தளப் பதி​வில், ‘நாட்​டில் அமைதி, சட்​டம்-ஒழுங்கை நிலைநாட்​டும் உயரிய கடமையில் இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறை​யினருக்​கு வீரவணக்​கங்​கள். இயற்​கைப் பேரிடர், விபத்து, குற்​றச் சம்​பவங்​கள் என பல சவால்​களை எதிர்​கொண்டு, துணிவு, விழிப்​புடன் பணி​யாற்​றும் காவலர்​களின் அர்ப்​பணிப்பு போற்​றுதலுக்​குரியது. கால நேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்​டின் அரணாகத் திகழும் காவல் துறை​யினரின் உன்​னத பணிகளைப் போற்​றிடுவோம்’ என கூறியுள்​ளார்.

காவலர் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி காப்பீட்டு நிதி: வீரவணக்க நாளில் முதல்வர் வழங்கினார்
நவம்பர் 1-ல் முதல்நிலைத் தேர்வு: குரூப்-2 தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in