ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க உத்தரவு

ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நவ.8-ம் தேதியும், சாத் பண்டிகை நவ.13-ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் தமிழக ரயில்வே போலீஸார் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களின் அனைத்து நுழைவாயில்களிலும் எக்ஸ்-ரே லக்கேஜ் ஸ்கேனர்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

வெடிபொருட்களை எளிதில் கண்டறியும் மோப்ப நாய்கள் குழுக்கள் ரயில் நிலையங்களில் தொடர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் மற்றும் நடைமேடைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இதுதவிர, ஆர்பிஎஃப் கலாசாரக்குழு சார்பில், ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதால் ஏற்படும் ஆபத்து தொடர்பாக ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க உத்தரவு
தமிழக சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம்

X