

சென்னை: தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை மிக கனமழையும், இதர 34 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உட்பட நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விமான சேவையும் பாதிப்புக்கு உள்ளானது. இந்நிலையில், சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மற்றும் 34 மாவட்டங்களில் திங்கள்கிழமை கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில், மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதில் இருந்து தமிழகக் கடலோரம் வரை வடமேற்கு வங்கக்கடல் வழியாகச் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அக்.19 (திங்கள்கிழமை) சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 34 மாவட்டங்களில் (மஞ்சள் அலர்ட்) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.
20-ம் தேதி தேனி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
அதற்கடுத்த 21-ம் தேதி நீலகிரி, கோவை, மதுரை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும்
வரும் 22-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். 23-ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
மேலும் 24-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், இடை இடையே ஓரிரு முறை மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை பாரி முனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27 செ.மீ., திருவொற்றியூர், எண்ணூரில் தலா 22 செ.மீ., எம்ஜிஆர் நகரில் 19 செ.மீ., தண்டையார்பேட்டை, பெரம்பூரில் தலா 18 செ.மீ., வடபழனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.