“எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடிப்பார்கள்!” - பஞ்சாங்கத்தில் இருப்பதாக நயினார் பரப்புரை

“எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடிப்பார்கள்!” - பஞ்சாங்கத்தில் இருப்பதாக நயினார் பரப்புரை
Updated on
1 min read

“ஆளும் கட்சியில் இருப்பவர்களுக்கு தொல்லைகள் அதிகம் வரும். அதனால், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என ஒரு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் இரவு புளியங்குடியில் பேசியதாவது: ஆளுங்கட்சிக்கு தொல்லைகள் அதிகம் வரும். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று ஒரு பஞ்சாங்கத்தில் இருக்கிறது. எனவே, திமுக ஆட்சியின் முடிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் வாசலில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் கூடியுள்ளது. பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நடந்தவாறு உள்ளது. திமுக ஆட்சி இன்னும் தொடர வேண்டுமா என்று மக்களே கேட்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதை தவிர திமுக-வினருக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

“எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடிப்பார்கள்!” - பஞ்சாங்கத்தில் இருப்பதாக நயினார் பரப்புரை
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in