தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் இன்று டெல்டா உள்​ளிட்ட 11 மாவட்​டங்களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அரபிக்​கடலில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப்பகுதி வலுவிழந்​து,தென்​கிழக்கு அரபிக்​கடல் பகு​தி​களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்​சியாகநீடிக்​கிறது. தெற்கு அந்​த​மான்கடல், அதையொட்​டிய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வுகிறது.

இதன் காரண​மாக இன்று தென்​கிழக்கு வங்​கக் கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகக்​கூடும். இது மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்து வரும் 24-ம் தேதி காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெற்​று, அதற்​கடுத்த 48 மணி நேரத்​தில் தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் மேலும் வலுப்​பெறக்​கூடும்.

இதன் காரண​மாக தமிழகத் தில் இன்று சில இடங்​களி​லும், நாளை தென் தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், வட தமிழகத்​தில் சில இடங்​களி​லும் 24-ம் தேதி சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும். இன்று கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, தென்​காசி, ராம​நாத​புரம், புதுக்​கோட்​டை, கடலூர், டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​காலிலும் கனமழை பெய்ய வாய்ப்​புள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in