கீழடியில் ரூ.24 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல்வர் திறந்து வைத்தார்

கீழடியில் ரூ.24 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல்வர் திறந்து வைத்தார்
Updated on
1 min read

சென்னை: மதுரை அடுத்த கீழடி​யில் ரூ.24.30 கோடியில் கட்​டப்​பட்​டுள்ள கீழடி திறந்​தவெளி அருங்​காட்​சி​யகத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். மேலும் ஈரோட்​டில் நொய்​யல், ராம​நாத​புரத்​தில் நாவாய் அருங்​காட்​சி​யகங்​களுக்​கும் அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தொல்​லியல் துறை சார்​பில் தமிழகத்​தின் வைகை நதிக்​கரை​யில் சங்​க​கால நகர நாகரி​கத்​தின் ஆய்​வுக்​கூட​மாக விளங்கும் வரலாற்று சிறப்​புமிக்க கீழடி​யில் சுமார் 4.5 ஏக்​கர் பரப்​பள​வில் 65,380 சதுர அடி​யில் இரண்டு காட்​சிக் கூடங்​களு​டன் ரூ.24.30 கோடி செல​வில் கீழடி திறந்​தவெளி அருங்​காட்​சி​யகம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதனை முதல்​வர் திறந்தார்.

இதே​போல் தஞ்​சாவூர் மாவட்​டம், சரபேந்​திர ராஜபட்​டினம் கடற்​கரையோரத்​தில் அமைந்​துள்ள மனோரா நினை​வுச் சின்​னத்​தில் ரூ.2.75 கோடி​யில் மேற்​கொள்​ளப்​ பட்ட உட்​கட்​டமைப்பு பணி​கள் மற்​றும் புதுபொலிவுடன் அமைக்​கப்​பட்​டுள்ள கட்​டிட முகப்பு விளக்​கு​களின் செயல்​பாடு​களை முதல்​வர் திறந்து வைத்​தார்.

மேலும், ஈரோடு மாவட்​டம், கரு​மாண்டி செல்​லி​பாளை​யத்​தில் ரூ.33.19 கோடி​யில் கட்​டப்​பட​வுள்ள நொய்​யல் அருங்​காட்​சி​யகம், ராம​நாத​புரம் மாவட்​டம், மண்​டபம் பகு​தி​யில் ரூ.34.55 கோடி​யில் கட்​டப்​பட​வுள்ள நாவாய் அருங்​காட்​சி​யகம் ஆகிய​வற்​றுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இதுத​விர, சோழர்​களின் மகத்​தான பங்​களிப்​பு​களை நினை​வு​கூரும் வகை​யில், சோழர் காலக் கலைப்​பொருட்​கள் மற்​றும் நினை​வுச் சின்​னங்​களை பாது​காத்து காட்​சிப்​படுத்​தும் நோக்​கில், 2023–24-ம் ஆண்டு பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டபடி, தஞ்சை தமிழ்ப் பல்​கலைக்​கழக வளாகத்​தில் 50 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.56.41 கோடி​யில் அருங்​காட்​சி​யகத் துறை​யால் அமைக்​கப்​பட​வுள்ள சோழர் அருங்​காட்​சி​யகத்​துக்கு முதல்​வர் அடிக்​கல் நாட்​டி​னார்.

தலை​மைச் செயல​கத்​தில் காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள் தங்​கம் தென்​னரசு, கே.ஆர்​. பெரியகருப்​பன், மு.பெ.​சாமி​நாதன், டி.ஆர்​.பி.​ராஜா, தலை​மைச்​செயலர் நா. முரு​கானந்​தம், பொதுப்​பணித் துறை செயலர் மங்​கத் ராம் சர்​மா, சுற்​றுலாத் துறை செயலர் மணி​வாசன், நிதித்​துறை செயலர் த.உதயச்​சந்​திரன், அருங்​காட்​சி​யகத் துறை இயக்​குநர்​ கவி​தா ரா​மு உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

முதல்வர் அழைப்பு: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு குறித்து சமூகவலைதளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவு: தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களை கீழடிக்கு பெற்றோர் அழைத்து வாருங்கள். கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

ராமநாதபுரம் - நாவாய், ஈரோடு- நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

கீழடியில் ரூ.24 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல்வர் திறந்து வைத்தார்
குஷ்பு, அண்ணாமலை குறித்த அவதூறு: திமுக பேச்சாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in