குஷ்பு, அண்ணாமலை குறித்த அவதூறு: திமுக பேச்சாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

குஷ்பு, அண்ணாமலை குறித்த அவதூறு: திமுக பேச்சாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
Updated on
1 min read

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குஷ்பு, அண்​ணா​மலை, பழனி​சாமி மற்​றும் ஜெயக்​கு​மார் குறித்து அவதூறு பரப்பும் வகை​யில் பேசி​ய​தாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பேச்​சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து எழும்​பூர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 100-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்​னிட்டு கடந்த 2023 ஜூன் 16 அன்று கொடுங்​கையூர் எருக்​கஞ்​சேரி பகு​தி​யில் நடந்த திமுக பொதுக்​கூட்​டத்​தில் பேசிய திமுக பேச்​சாளர் சிவாஜி கிருஷ்ண​மூர்த்தி என்ற கிருஷ்ண​மூர்த்தி (63), தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, பாஜக நிர்​வாகி​களான குஷ்பு, அண்​ணா​மலை மற்​றும் அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமி, அதி​முக முன்​னாள் அமைச்சர் ஜெயக்​கு​மார் ஆகியோர் குறித்து அவ தூறு பரப்​பும் வகை​யிலும் சாதி, மத, மொழி கலவரத்​தைத் தூண்​டும் வகை​யிலும் பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யிலும் பேசி​ய​தாக போலீ​ஸில் புகார் அளிக்​கப்​பட்​டது.

இதன்பேரில் பல்​வேறு பிரிவு​களின்​கீழ் கொடுங்​கையூர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து சிவாஜி கிருஷ்ண​மூர்த்​தியை 2023 ஆக.18 அன்று கைது செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை எழும்​பூர் பெருநகர குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் நீதிபதி பி.ரேவதி முன்​பாக நடந்து வந்​தது. அப்​போது அரசு தரப்​பில் குற்​ற​வியல் வழக்​கறிஞர் சம்​பத்​கு​மார் ஆஜராகி குற்​றச்​சாட்டை நிரூபித்​தார்.

அதையடுத்து நீதிபதி ரேவ​தி, குற்​றம்​சாட்​டப்​பட்ட திமுக பேச்​சாளர் சிவாஜி கிருஷ்ண​மூர்த்​திக்கு 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை மற்​றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்​பளித்​துள்​ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​ய ஏது​வாக தண்​டனையை நிறுத்​தி வைத்​தும்​ நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

குஷ்பு, அண்ணாமலை குறித்த அவதூறு: திமுக பேச்சாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in