கர்நாடக எல்லையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தீ விபத்து: ஊழியர் படுகாயம்

தீ  விபத்து

தீ விபத்து

Updated on: 
1 min read

ஓசூர்: ​ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஓசூர் அடுத்த கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு நேற்று நள்ளிரவு கார் ஒன்று எரிபொருள் நிரப்ப வந்துள்ளது. ஊழியர் காருக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பெட்ரோல் போடும் பைப் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இந்த தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது. தீ விபத்தில் பெட்ரோல் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் முத்துக்குமார் (32) என்பவரது உடலில் தீப்பற்றி காயமடைந்தார்.

​உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கர்நாடகா தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் ​இந்த விபத்தில் பெட்ரோல் போட வந்த கார் முற்றிலும் எரிந்து சேதமானது. விபத்து குறித்து அத்திப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>தீ  விபத்து</p></div>
பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in