ஓணம், மிலாது நபி பண்டிகைகள்: தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

Updated on
1 min read

சென்னை: கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் மற்றும் இஸ்லாமிய மக்களின் மிலாது நபி பண்டிகைகளை ஒட்டி தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள் வருமாறு:

“உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!

கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிலாது நபி திருநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!

மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!

இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய்</p></div>
ஒரு பூவால் சிக்கிய Q காமர்ஸ் நிறுவனங்கள் - கர்நாடகா கெடுபிடியும் பின்புலமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in