தேர்தலையொட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்வு

சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம்
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தேர்​தலை​யொட்டி ஆம்னி பேருந்​துகளில் கட்​ட​ணம் பல மடங்கு உயர்த்​தப்​பட்​டுள்​ள​தால் பொது​மக்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு வரும் வியாழக்​கிழமை நடை​பெறவுள்​ளது. இதனிடையே அன்​றைய தினம் பொது விடு​முறை​யாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை போன்ற பெருநகரங்​களில் தனி​யார் நிறு​வனங்​களில் பணி​யாற்​று​பவர்​கள் வாக்​களிக்க தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​வார்​கள். அவர்​களின் வசதிக்​காக நாளை முதல் தமிழக போக்​கு​வரத்து துறை சார்​பில் 10 ஆயிரம் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் அரசு பேருந்​துகளில் முன்​ப​திவு செய்ய முடி​யாதவர்​கள் அடுத்​த​படி​யாக தனி​யார் ஆம்னி பேருந்​துகளை தேர்வு செய்​வார்​கள், இந்​நிலை​யில் பயணி​களின் சூழ்​நிலையை பயன்​படுத்தி சில ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கின்​றனர். சென்​னை​யில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்​சி, நெல்லை மற்​றும் நாகர்​கோ​வில் போன்ற முக்​கிய நகரங்​களுக்கு செல்​லும் ஆம்னி பஸ் கட்​ட​ணம் வழக்​கத்​தை​விட 2 முதல் 3 மடங்கு வரை அதி​கரித்​துள்​ளது. சாதாரண நாட்​களில் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும் நிலை​யில் தற்​போது பல மடங்கு அதி​கரித்து உள்​ளது. இதனால் நடுத்தர மக்​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகி​உள்​ளனர்.

நாளை, நாளை மறு​நாள் இரண்டு நாட்​களும் சென்​னை​யில் இருந்து நெல்​லைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்​சாதனமில்லா பேருந்​துகளில் அதி​கபட்ச கட்​ட​ணம் ரூ.2,400 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் தற்​போது ரூ.3 ஆயிரம் வரை கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

தூத்​துக்​குடிக்கு படுக்​கைவசதி கொண்ட குளிர்​சாதன பேருந்​துகளில் அதி​கபட்​ச​மாக ரூ.2,700 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் ரூ.3,200 வரை​யும், மதுரைக்கு அதி​கபட்​ச​மாக ரூ.2,200 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் ரூ.2,400 முதல் 3,500 வரை​யும், திருச்​சிக்கு அதி​கபட்​ச​மாக ரூ.1,500 நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் ரூ.2,000 முதல் 2,600 வரை​யும் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​கிறது.

பொது​மக்​கள் தீபாவளி, பொங்​கல் போன்ற பண்​டிகை நாட்​களில் இது​போல அதிக கட்​ட​ணம் வசூலிப்​ப​தைக் கூட ஒரு வியா​பார யுக்​தி​யாக கடந்து செல்ல முடிகிறது. ஆனால் தேர்​தல் என்​பது ஜனநாயக கடமை அதை நிறைவேற்ற செல்​வோரிடம் இவ்​வாறு அதிக கட்​ட​ணம் வசூலிப்​பதை என்ன என்று சொல்​வது என ஆதங்​கத்தை வெளிப்​படுத்​துகின்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சீரிய வெற்றி யாருக்கு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in