பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க பரிசீலிக்க வேண்டும்: அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை

பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க பரிசீலிக்க வேண்டும்: அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: தென் மாவட்ட பேருந்​துகளை மீண்​டும் கோயம்​பேட்​டில் இருந்து இயக்க தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்​டும் என கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர் சங்​கத் தலை​வர் அன்​பழகன் முதல்​வர் விஜய்க்கு எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை நகரில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைப்​ப​ தற்​கும், சுற்​றுச்​சூழல் மாசு​பாட்​டைக் கட்​டுப்​படுத்​து​வதற்​கும் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் உரு​வாக்​கப்​பட்​டது.

ஆனால் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம் முழு​மை​யான வசதி​யை​யும் எளி​தான அணுகலை​யும் வழங்​க​வில்லை என்​பது பயணி​களின் கருத்​தாக உள்​ளது.

தற்​போது, சென்​னையி​லிருந்து கிளாம்​பாக்​கம் செல்ல பயணி​கள் தனி​யார் வாக​னங்​கள், கூடு​தல் அரசு மாநகரப் பேருந்​துகளை பயன்​படுத்த வேண்​டிய நிலை உள்​ளது.

இதனால் நேர விரய​மும் போக்​கு​வரத்து நெரிசலும் சுற்​றுச்​சூழல் மாசு​பாடும் அதி​கரித்து வரு​கிறது. குறிப்​பாக, நகரின் மத்​திய மற்​றும் வடக்கு பகு​தி​களி​லிருந்து வரும் பயணி​கள் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக பயணம் செய்து கிளாம்​பாக்​கம் செல்ல வேண்​டிய சூழல் உள்​ளது.

கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு மெட்ரோ ரயில், மின்​சார ரயில் இணைப்​பு​கள் இது​வரை முழு​மை​யாக செயல்​படுத்​தப்​ப​டாத​தால், மக்​கள் அதிக சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர்.

கோயம்​பேடு பேருந்து நிலை​யம் சென்​னை​யின் மையப்​பகு​தி​யில் அமைந்​துள்​ள​தால், மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து மற்​றும் பிற பொதுப் போக்​கு​வரத்து வசதி​கள் போது​மான அளவில் உள்​ளன.

சென்​னை​யின் அனைத்து பகு​தி​களி​லிருந்​தும் பயணி​கள் எளி​தாக கோயம்​பேடு வந்​தடைந்து தென் மாவட்​டங்​களுக்கு பயணம் செய்ய முடி​யும். சென்னை நகருக்​குள் தினசரி பள்​ளி, கல்​லூரி, தொழிற்​சாலை மற்​றும் ஐ.டி. நிறு​வனங்​களுக்கு 10,000-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

ஆனால் வெளியூருக்கு செல்​லும் பேருந்​துகள் சுமார் 3,000 மட்​டுமே இயக்​கப்​படு​கின்​றன. எனவே வெளியூர் பேருந்​துகள்​தான் சென்னை போக்​கு​வரத்து நெரிசலுக்​கான முக்​கிய காரணம் என்ற கருத்து சரியல்ல.

எனவே, பயணி​களின் நலனைக் கருத்​தில் கொண்​டு, கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​திலிருந்​தும் அரசுப் பேருந்​துகள் மற்​றும் தென் மாவட்ட சேவை​களை மீண்​டும் இயக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்​டும் என்​று, பயணி​கள் சார்​பாக கோரிக்கை வைக்​கிறோம்​ எனத்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்க பரிசீலிக்க வேண்டும்: அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கோரிக்கை
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in