சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன்
பி.வி.பாலசுப்ரமணியம், டி.கவுதமன், ஜான் சத்யன்

பி.வி.பாலசுப்ரமணியம், டி.கவுதமன், ஜான் சத்யன்

Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் நடை​பெறும் வழக்​கு​களில் தமிழக அரசின் சார்​பில் ஆஜராகி வாதிட ஏது​வாக 2 கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​கள் மற்​றும் மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞரை நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதைத் தொடர்ந்​து, அரசு தலைமை வழக்​கறிஞ​ராக இருந்த பி.எஸ்​.​ராமன் ராஜி​னாமா செய்​தார். அதே​போல, அரசு தரப்​பின் பல்​வேறு வழக்​கறிஞர்​களும் தங்​கள் பதவி​களை ராஜி​னாமா செய்​தனர். இதையடுத்​து, அந்​தப் பதவி​களுக்கு புதி​ய​வர்​கள் நியமனம் செய்​யப்​பட்டு வரு​கின்​றனர்.

அதன்​படி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞ​ராக விஜய் நாராயண் ஏற்​கெனவே நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், அவருடைய பரிந்​துரைப்​படி சென்னை உயர் நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் தமிழக அரசு தரப்​பில் வழக்​கு​களில் ஆஜராகி, வாதிட ஏது​வாக மூத்த வழக்​கறிஞர்​கள் பி.​வி.​பாலசுப்​பிரமணி​யம், டி.க​வுதமன் ஆகியோரை கூடு​தல் அரசு தலைமை வழக்​கறிஞர்​கள் அந்​தஸ்​தில் நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

அதே​போல மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞ​ராக மூத்த வழக்​கறிஞர் ஜான் சத்​யனை நியமித்​தும் தமிழ்நாடு அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இவர்​கள் அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நா​ராயணை சந்​தித்து வாழ்த்து பெற்​றனர்​.

<div class="paragraphs"><p>பி.வி.பாலசுப்ரமணியம், டி.கவுதமன், ஜான் சத்யன் </p></div>
ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in