இடைநீக்கத்தை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுநர், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு நோட்டீஸ்

இடைநீக்கத்தை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுநர், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் மீதான இடைநீக்​கம் ரத்து செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் ஆளுநர் சம்​பந்​தப்​பட்ட முன்​னாள் துணைவேந்​தர் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.

அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​த​ரான ஆர்​.வேல்​ராஜ் முறைகேடு புகார் காரணமாக கடந்​தாண்டு பணி ஓய்வு பெற​விருந்த நிலையில் இடைநீக்​கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வேல்​ராஜ், பல்கலைக்​கழக வேந்​த​ரான ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யிடம் மேல்​முறை​யீடு செய்​தார்.

இதை ஏற்று இடைநீக்க உத்​தரவை ரத்து செய்து கடந்​தாண்டு செப்.5 அன்று ஆளுநர் உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை எதிர்த்து அண்ணா பல்​கலைக்​கழகம் சார்​பில் பதி​வாளர் வி.குமரேசன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்​.தண்​ட​பாணி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அண்ணா பல்​கலைக்​கழக பதி​வாளர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​ஸன் வில்​சன், வாதிடும்போது, முன்​னாள் துணைவேந்​த​ரான வேல்​ராஜ் மீதான முறை​கேடு குற்​றச்​சாட்​டு​களின்பேரில், தமிழக லஞ்​ச ஒழிப்​புத் துறை விசா​ரணை நடத்தி சமர்ப்​பித்த அறிக்​கை​யின் அடிப்​படை​யில் வேல்​ராஜூக்கு எதி​ராக துறைரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் ஆட்சி மன்​றக்​குழு​வின் விளக்​கத்​தைக் கோராமல் வேந்​தர் என்ற முறை​யில் ஆளுநர் நேரடி​யாக நிர்​வாகத்​தில் தலை​யிட்டு இடைநீக்க உத்​தரவை ரத்து செய்​துள்​ளார். இது சட்​ட​விரோதமாகும் என வாதிட்​டார்.

அதையடுத்து நீதிப​தி பிறப்பித்த உத்தரவில், இது தொடர்​பாக பல்​கலைக்​கழக வேந்​த​ரான ஆளுநர் தரப்​பிலும், முன்​னாள் துணைவேந்​த​ரான ஆர்​.வேல்​ராஜ் தரப்​பிலும் பதிலளிக்க உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளார்​.

இடைநீக்கத்தை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுநர், அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு நோட்டீஸ்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு: கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in