தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு

டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமி​ழ​கத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை இன்று தொடங்க வாய்ப்பு உள்​ளது. இதனால் 19 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்​யக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

நாட்​டின் மற்ற பகு​தி​களில் இருந்து தென்​மேற்கு பரு​வ​மழை இன்று முழு​வது​மாக வில​கு​வதற்​கான சூழல் உரு​வாகி வரு​கிறது. அதேநேரம், வடகிழக்​குப் பரு​வ​மழை தென்​னிந்​தி​யா​வின் தென்​பகு​தி​களில் இன்று தொடங்​கு​வதற்​கான சாதக​மான நிலை காணப்​படு​கிறது.

மேலும், மத்​திய கேரளம் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் சுமார் 4.5 கிமீ உயரத்​தில் ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது. குமரிக்​கடல் பகு​தி​கள் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது.

குமரிக்​கடல் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல சுழற்​சி​யில் இருந்து மன்​னார் வளை​கு​டா, தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​கள் வழி​யாக ஒடிசா கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் உள்ள வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​கள் வரை சுமார் 1.5 கிமீ உயரத்​துக்கு ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக தமி​ழ​கத்​தில் இன்று நீல​கிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை ஆகிய டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், தென்​காசி, கன்​னி​யாகுமரி, கள்​ளக்​குறிச்​சி, சேலம், திருச்​சி, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, ராணிப்​பேட்​டை, திருப்​பூர், திண்​டுக்​கல் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக்​கூடும். மற்ற மாவட்​டங்​களில் பெரும்​பாலான இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

16-ம் தேதி (நாளை) நீல​கிரி, கோவை, ஈரோடு, திருப்​பூர், திண்​டுக்​கல், தேனி, விருதுநகர், தென்​காசி, கன்​னி​யாகுமரி, ராம​நாத​புரம், சிவகங்​கை, திருச்​சி, நாமக்​கல், தரு​மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திரு​வண்​ணா​மலை, கள்​ளக்​குறிச்​சி, விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, காஞ்​சிபுரம், சென்​னை, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்​டை, கடலூர் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும், மற்ற மாவட்​டங்​களில் பெரும்​பாலான இடங்​களில் மித​மான மழை​யும் பெய்​யக்​கூடும். சென்னை மற்றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேக மூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக நாகப்​பட்​டினம் மாவட்​டம் கோடியக்​கரை​யில் 5 செ.மீ. ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன், விருதுநகர், திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி,

நாகப்​பட்​டினம் மாவட்​டம் திருப்​பூண்​டி​யில் 4 செ.மீ. புதுச்​சேரி, தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூர், கன்​னி​யாகுமரி மாவட்​டம் பாலமோரில் 3 செ.மீ. மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு
ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்த சிஜேபி நிர்வாகிகளுக்கு 5 நாள் நீதிமன்ற காவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in