“அரசியலில் உதயநிதி கடைசி வரை கத்துக்குட்டி தான்!” - தவெக நிர்மல்குமார் விமர்சனம்

சி.டி.நிர்மல்குமார்

சி.டி.நிர்மல்குமார்

Updated on
2 min read

மதுரை: “மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், உதயநிதி கவுன்சிலராக கூட ஆயிருக்க முடியாது” என தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் சென்னையில் இருந்து விமான மூலம் இன்று மதுரைக்கு வந்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு 4,300-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளன.

கமிஷன் வாங்க அவசரத்தில் ஓடுவதற்காக இதை செய்வதுபோல் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை எனத் தெரிகிறது. கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஓடலாம் என நினைக்கின்றனர். இந்த டெண்டர்கள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் கமிஷன் கிடைக்க வாய்ப்புள்ளது.

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பட்ஜெட்டுக்கு முன்பாகவே ஒதுக்கி இருக்கின்றனர். முறைகேடு செய்வதற்காகவே ஒதுக்கி இருப்பது போன்று தெரிகிறது. சென்னை மாநகராட்சி ரூ.4,000 கோடி டெண்டர் 10 நாளில் முடித்துள்ளனர்.

அடுத்த ஆட்சி எங்களுடையது. முறைகேடு டெண்டர்கள் ரத்து செய்யப்படும். டெண்டர் எடுப்பவர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. முறையான விதிப்படி வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டும். அதிகாரிகள் விலை போகாமல் பொறுப்பாக இருக்கவேண்டும். திமுகவுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்காமல் மக்களுக்காக செயல்படவேண்டும்.

கருணாநிதி குடும்பத்தில் உதயநிதி பிறக்கவில்லை என்றால் திமுகவில் அவரால் கவுன்சிலர், ஒன்றிய செயலாளர் கூட ஆகியிருக்க முடியாது. அவர் தந்தையே ஒரு பொம்மை முதல்வர். தந்தை செல்ல முடியாத இடத்துக்குச் சென்று வேலைகளை செய்கிறார். அவரது துறை செயலாளரிடம் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்திருப்பாரா?

உதயநிதி கடைசி வரை கத்துக்குட்டியாகவே இருப்பார். நாயுடன் விளையாடும் புகைப்படத்தை ஒரு துணை முதல்வர் வெளியிடுவாரா? யாரோ ஆரம்பித்த கட்சியால் அவர் இன்று அறிவாலயத்தில் அமர்ந்து இருக்கிறார். அவருக்கு அரசியல் தெரியாது, கற்றுக்கொள்ளப் போவதுமில்லை. அண்ணாவை மறந்தது திமுக, அதிமுக. எம்ஜிஆர் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியவர் கருணாநிதி. அக்குடும்பத்துக்கு கட்சி அரசியல் எல்லாம் ஒரு வியாபாரம். எங்கள் தலைவர் மக்கள் பணி செய்ய வந்திருக்கிறார்.

தவெக வேட்பாளர் தேர்வை பொறுத்தவரையில், முழுமையாக எங்கள் தலைவர்தான் தேர்வு செய்வார். விருப்ப மனுக்கள் வந்து கொண்டிருக்கிறது. யாருடைய தலையிடும் இன்றி தனிப்பட்ட முறையில் அவர் முடிவெடுப்பார்.

நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு விலை போகி பல நாட்களாகிவிட்டது. அண்ணன் டிடிவி காலில் விழுந்து அமைச்சராக இருந்தார் என நினைக்கிறேன். ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்த பிறகு எந்த முக்கிய பொறுப்பும் வழங்கவில்லை. நயினார் நாகேந்திரன் திமுக பற்றி பேசவே இல்லை. தினமும் எங்களைப் பற்றிதான் பேசுகிறார். நெல்லையில் அவர் தோற்பது உறுதி. அண்ணன் மாணிக்கம் தாகூர் பேசியதை பார்ப்பேன். அவர் கேட்பது நியாயமான கோரிக்கை. அவர் கான்ட்ராக்டோ, கமிஷனோ கேட்கவில்லை. மரியாதையை கேட்கிறார்.

2001 காலக்கட்டத்தில் திமுகவை காப்பாற்றியது காங்கிரஸ். 2006-இல் மைனாரிட்டி அரசாக இருந்தபோது, அரசாங்கதில் பங்கு கொடுப்பதாக சொல்லி ஆட்சி அமைத்தார் கலைஞர். ஆனால் அதை சோனியா காந்தி மன்னித்து விட்டுவிட்டார். எங்களை நம்ப வைத்து கருணாநிதி ஏமாற்றி விட்டார். மைனாரிட்டி அரசுக்கு நாங்கதான் இருக்கிறோம் என அன்றைக்கு பேசினர். காங்கிரஸ் சிறுபான்மையினர் வாக்குகளுக்காக அந்த கட்சியை வைத்திருக்கின்றனர். திமுகவுக்கு காங்கிரஸ்தான் அரசியல் வாழ்க்கை கொடுத்தவர்கள்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அனைத்து இடத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்களை திமுகவே எதிர் வேட்பாளரை நிறுத்தி தோற்கடித்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன், கோ.தளபதி சும்மா பேசவில்லை. திமுக தலைமை சொன்னதை பேசி இருக்கின்றனர். பாமகவை எப்படி ஒழித்துக் கட்டினார்களோ அதுபோன்று காங்கிரஸையும் தோக்கடிப்பர். கூடவே வைத்து துரோகம் செய்வது திமுகவினர் வல்லவர்கள். மொத்த அமைச்சர்களும், தலைவர்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெயிக்க வைக்கக்கூடாது என, முடிவெடுப்பதாக தகவல் வந்துள்ளது. காலம் பதிலளிக்கும்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>சி.டி.நிர்மல்குமார்</p></div>
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் பிப்.21-ல் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in