போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை, மதுரை உட்பட 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: ​போதைப் பொருள் கடத்​தல் வழக்கு தொடர்​பாகத் தமிழ​கத்​தில் சென்​னை, மதுரை உள்​ளிட்ட 8 இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) அதி​காரி​கள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர்.

கடந்த 2024-ம் ஆண்டு நவ.23-ம் தேதி, அந்​த​மான் கடற்​பகு​தி​யில் சந்​தேகத்​துக்கு இடமாகச் சென்ற மியான்​மர் நாட்​டைச் சேர்ந்த படகில் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்​பிலான 6,016.87 கிலோ ‘மெத்​தம்​பெட்​டமைன்’ போதைப்​பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது. அத்​துடன், படகில் இருந்த 6 பேரும் கைது செய்​யப்​பட்​டனர்.

அவர்களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யின் அடிப்படையில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) விசா​ரணை​யைத் தீவிரப்படுத்​தி​யது.

விசா​ரணை​யின் தொடர்ச்​சி​யாக, மிசோரம் மற்​றும் தமி​ழ​கத்​தின் பல்​வேறு இடங்​களில் என்ஐஏ அதி​காரி​கள் நேற்று அதி​காலை அதிரடி சோதனை​யில் ஈடு​பட்​டனர். தமி​ழ​கத்​தைப்

பொறுத்​தவரை சென்​னை, மதுரை​யில் 8 இடங்​களில் இந்த சோதனை நடை​பெற்​றது. சென்னை நந்​தனம் சிஐடி நகரில் வசிக்​கும் தோல் ஏற்​றுமதி மற்​றும் இறக்​குமதி அதிபர் இக்பால் என்​பவரது வீடு, வண்​ணாரப்பேட்டை மின்ட் மா​டர்ன் சிட்​டி​யில் வசித்து வரும் அபுபக்​கர் கனி சித்​திக் என்​பவரது வீடு, அந்​தப் பகுதி கட்​டிட உரிமை​யாளரின் போரூர் வீடுகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தாம்​பரம் அருகே பெரும்​பாக்​கம் இந்​திரா பிரியதர்​ஷினி நகரில் வசிக்​கும் சார்​லஸ் ஜோசப் ரெட்டி என்​பவரது வீட்​டில் 10-க்​கும் மேற்​பட்ட அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இவருடன் வெளி மாநிலத்​தைச் சேர்ந்த பெண் ஒரு​வ​ரும் விசா​ரணை வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்டுள்ளார்.

ஆவடி தமிழ்​நாடு வீட்டு வசதி வாரியக் குடி​யிருப்​பில் வசிக்கும் துணி வியா​பாரி அமீர் வீட்​டிலும் என்ஐஏ சோதனை நடந்​தது. இதே போல், மதுரை மாவட்​டம் பெருங்​குடியைச் சேர்ந்த, மணிப்​பூர் மாநிலத்​தில் தொழில் செய்து வரும் தொழில​திபர் பால​முரு​கன் என்​பவரது வீட்​டில் அவரது மனைவி முரு​கேஸ்​வரி​யிடம் விசாரணை நடத்தினர்.

சோதனை முழுமையாக முடிந்த பிறகு விவரங்கள் வெளியிடப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் கூறினர்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
தொகுதி மறுவரையறையை எதிர்த்து தனித் தீர்மானம்: திமுக ஆதரவுடன் பேரவையில் நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in