அரசின் நிர்வாக அலட்சியமே மின் தட்டுப்பாட்டுக்கு காரணம்: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

Updated on: 
1 min read

நாகப்பட்டினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் கூறியதாவது:

தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என அதிக விலைக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளது மின் வாரியத்துக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். மின் தேவையை முன்கூட்டியே கணித்து, குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெறுவதற்கான திட்டமிடலை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்.

உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத நிர்வாக அலட்சியமே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம். மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.

<div class="paragraphs"><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்</p></div>
மின் இணைப்புக்கு லஞ்சம்: மின்வாரிய ஊழியர் 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in