“​திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல ஜீரோ; ஹீரோயின் இல்லை ஹெராயின்” - ரைமிங்காக நயினார் கடும் தாக்கு

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

திமுக​வினர் தங்​கள் தேர்​தல் அறிக்​கையை ஹீரோ தேர்​தல் அறிக்கை என்​றும், ஹீரோ​யின் தேர்​தல் அறிக்கை என்​றும் சொல்​கிறார்​கள். ஆனால், அதை ஒரு ஜீரோ தேர்​தல் அறிக்​கை​யாக​வும், ஹெரா​யின் தேர்​தல் அறிக்​கை​யாக​வும்​தான் பார்க்​கிறேன் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கடுமை​யாகத் தாக்​கி​யுள்​ளார்.

​பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் திருநெல்​வேலி​யில் நேற்று செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது:

பாஜக​வின் தேர்​தல் அறிக்கை இன்​னும் இரண்டு தினங்​களில் வெளி​யாகும். திமுக கூட்​ட​ணி​யில் பெரும் சலசலப்பு நிலவி வரு​கிறது. காங்​கிரஸ் கட்சி அந்த கூட்​ட​ணி​யில் சேர்ந்​ததே பெரிய போராட்​ட​மாகத்​தான் இருந்​தது.

மாணிக்​கம் தாகூர், மூத்த தலை​வர்​கள் என திமுக கூட்​டணி தொடர்​பாக காங்​கிரஸில் பெரும் கருத்து வேறு​பாடு​கள் உள்​ளன. அதே​போல், விடு​தலை சிறுத்​தைகள் கட்சி தலை​வர் திரு​மாவளவன் தான் போட்​டி​யிடு​வ​தாக அறி​வித்த தொகு​தி​யில் தற்​போது போட்​டி​யிட​வில்லை என்று கூறி​யிருப்​பது அவர்​களின் கூட்​ட​ணி​யில் நில​வும் சலசலப்பை காட்​டு​கிறது.

திமுக​வினர் தங்​கள் தேர்​தல் அறிக்​கையை ஹீரோ தேர்​தல் அறிக்கை என்​றும், ஹீரோ​யின் தேர்​தல் அறிக்கை என்​றும் சொல்​கிறார்​கள். ஆனால், அதை ஒரு ஜீரோ தேர்​தல் அறிக்​கை​யாக​வும், ஹெரா​யின் தேர்​தல் அறிக்​கை​யாக​வும்​தான் பார்க்​கிறேன். தமிழகம் முழு​வதும் கஞ்சா மற்​றும் போதைப் பொருட்​கள் புழக்​கத்தை உரு​வாக்​கியது திமுக. சொத்​து​வரி, மின்​கட்​ட​ணத்தை திமுக ஆட்​சி​யில் உயர்த்​தினர். மாதம் ஒரு​முறை மின் கட்​ட​ணம் வசூலிப்​போம் என்ற வாக்​குறு​தியை நிறைவேற்​றாமல் மக்​களை ஏமாற்​றி​விட்​டார்​கள்.

பிரதமர் நரேந்​திர மோடி விரை​வில் கன்​னி​யாகுமரி மற்​றும் கோவைக்கு வருகை தர உள்​ளார். நடிகர் விஜய்க்கு கூடும் கூட்​டத்​துக்​கும் ஓட்​டுக்​கும் எந்த சம்​பந்​த​மும் கிடை​யாது. அவர் ஒரு சினிமா நடிகர், அவ்​வளவு​தான். தேர்​தல் முடிந்த பிறகு இதற்​கான உண்மை தெரி​யும்.

நான் திங்​கட்​கிழமை (இன்​று) மதி​யம் 12 மணிக்கு சாத்​தூர் தொகு​தி​யில் எனது வேட்​புமனுவை தாக்​கல் செய்​கிறேன். இந்த நிகழ்​வில் பங்​கேற்​ப​தற்​காக மகா​ராஷ்டிரா மாநில முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ், மத்​திய அமைச்​சர்​கள்​ வரு​கின்​றனர்​.இவ்​வாறு அவர்​ கூறினார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன்</p></div>
அதிமுகவை தங்கள் அணியில் பாஜக சேர்த்திருப்பது ஏன்? - டி.ராஜா விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in