‘சென்னை மெட்ரோ’வின் முதல் மேலாண் இயக்குநர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி முனிர் ஹோடா காலமானார்

முனிர் ஹோடா.

முனிர் ஹோடா.

Updated on: 
1 min read

சென்னை: முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி யும், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் முதல் மேலாண் இயக்​குநரு​மான முனிர் ஹோடா காலமானார். அவருக்கு வயது 76.

ஜார்க்​கண்ட் மாநிலம் ஜாம்​ஷெட்​பூரில் பிறந்த முனிர் ஹோடா, பனாரஸ் ஹிந்து பல்​கலைக்​கழகத்​தில் எம்​பிஏ முடித்து, 1976-ம் ஆண்டு இந்​திய ஆட்​சிப் பணி​யில் இணைந்​தார்.

தமிழக அரசில் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களை வகித்​தவர். கடந்த 4 ஆண்​டுகளுக்​கும் மேலாக பக்​கவாட்டு நரம்​புத் தளர்ச்சி நோயால் (ALS) பாதிக்​கப்​பட்​டிருந்​தார்.

அதற்​காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சென்​னை​யில் உள்ள தனியார் மருத்​து​வ​மனை​யில் நேற்று காலமானார். அவருக்கு பர்​வீன் என்ற மனைவி, சமீர் என்ற மகன், தபசும் என்ற மகள் உள்​ளனர்.

திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், சென்​னை​யில் உள்ள முனிர் ஹோடா இல்​லத்​துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்​சலி செலுத்தி, குடும்​பத்​தினருக்கு ஆறுதல் கூறினார்.

இது​தொடர்​பாக ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக உள்​துறைச் செயலர், டிஎன்​பிஎஸ்சி தேர்​வுக் கட்​டுப்​பாட்டு அலு​வலர், மாநிலத் தேர்​தல் ஆணை​யர் உள்​ளிட்ட பல்​வேறு முக்​கியப் பொறுப்​பு​களை வகித்து, நீண்ட காலம் அரசுப் பணி​யாற்​றிய​வர்.

கருணாநி​தி​யின் முதன்​மைச் செயலராகப் பணி​யாற்​றிய​வர். சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் முதல் மேலாண் இயக்​குநராக அவர் ஆற்​றிய பங்​களிப்பு அளப்​பரியது. நிர்​வாகத் துறை​யில் பல ஆண்​டுகால அனுபவம் கொண்​ட​வர்.

அவரது மறைவால் வாடும் குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள் உள்​ளிட்ட அனைவருக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கல், ஆறுதலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.முனிர் ஹோடா.

<div class="paragraphs"><p>முனிர் ஹோடா.</p></div>
நவ.12-ல் தொடங்கும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை கட்சியினர் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்: பழனிசாமி அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in