“தவெகவில் சேர்ந்ததற்கு அழுத்தம் எதுவும் இல்லை” - எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

கரூர்: சுய விருப்​பத்​தின்​பேரில்​தான் தவெக​வில் இணைந்​தேன் என முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் தெரி​வித்​தார்.

இதுகுறித்து கரூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: தவெக​வில் இணைந்​த​போது மாமல்​லபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நான் தெரி​வித்த கருத்து தவறாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது. தவெக​வில் இணை​யு​மாறு யாரும் என்னை அழைக்​க​வில்​லை. அதி​முகதலைமை மீது ஏற்​பட்ட அதிருப்​தி​யில் முன்​னாள் அமைச்​சர்​கள், முன்​னாள் எம்​எல்​ஏக்​கள், கட்சி நிர்​வாகி​கள் என ஏராள​மானோர் அதி​முகவில் இருந்து விலகி தவெக​வில் இணைந்து வந்​தனர்.

கரூர் தொகு​தி​யில் என்னை வெற்றி பெற வைத்த நிர்​வாகி​கள், தொண்​டர்​களிடம் கருத்து கேட்​ட​போது பெரும்பாலானோர் தவெக​வில் இணைய விருப்​பம் தெரி​வித்​தனர். இதையடுத்தே யாருடைய அழுத்​த​மும் இல்​லாமல், முதல்​வர் விஜய் தலை​மையை ஏற்று தவெகவில் இணைந்​தேன். தவெக நிர்​வாகி​களோ, தவெக​வில் இணைந்​தவர்​களோ அழைப்​பின்​பேரில் தவெக​வில் இணை​ய​வில்​லை. எனது சுய விருப்​பத்​தின்​பேரிலேயே தவெக​வில் இணைந்​தேன்.

கடந்த ஆட்​சி​யில் நெடுஞ்​சாலைத் துறை​யில் சாலை அமைக்​காமல் ஊழல் செய்​தது குறித்து அப்​போதே புகார் அளித்​தோம். அதி​காரி​கள் மட்​டும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். தவெக ஆட்சி அமைந்​ததும் அமைச்​சர் உள்​ளிட்​டோர் மீது நீதி​மன்​றம் மூலம் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு கூறினார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் | கோப்புப்படம்
“ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும்; கப்பல்களுக்கு 20% கட்டணம்” - ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in