சவுதியில் தவிக்கும் இந்தியா்களை மீட்க கோரி மத்திய அரசுக்கு நவாஸ் கனி எம்.பி. கடிதம்

நவாஸ் கனி எம்.பி

நவாஸ் கனி எம்.பி

Updated on: 
1 min read

சென்னை: சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா விமான நிலையத்தில் தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்திய உம்ரா பயணிகளை உடனடியாக மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புனித உம்ரா பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியா சென்றுள்ள நூற்றுக்கணக்கான இந்தியர்கள், அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிப்பு காரணமாக ஜெட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

விமானங்கள் கிடைக்காத நிலையில், அத்தியாவசியத் தேவைகளும் முறையாகக் கிடைக்காமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் முதியவர்கள் உள்ளிட்ட உம்ரா பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>நவாஸ் கனி எம்.பி</p></div>
தமிழக மீனவர்கள் 9 பேருக்கு இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in