அரசு மருத்​து​வ​மனை​களில் குழந்தைகள் மருந்து தட்டுப்பாடு: கனிமொழி எம்.பி. புகார்

அரசு மருத்​து​வ​மனை​களில் குழந்தைகள் மருந்து தட்டுப்பாடு: கனிமொழி எம்.பி. புகார்
Updated on
1 min read

சென்னை: திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்பி வெளி​யிட்​டுள்ள எக்ஸ் தளப் பதி​வு: சென்​னை, தேனி, தரு​மபுரி, திருப்​பூர், கடலூர், திரு​வண்​ணா​மலை, வேலூர், கரூர் உள்​ளிட்ட தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் பச்​சிளம் குழந்​தைகளின் உயிர்​காக்​கும் மருந்​துகள் கிடைப்​ப​தில் தட்​டுப்​பாடு நில​வுவ​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யிருக்​கின்​றன.

பிறந்த பச்​சிளம் குழந்​தைகளுக்கு மிக​வும் அடிப்​படைத் தேவை​யான உயிர்​காக்​கும் மருந்​துகளை வழங்க முடி​யாமல் என்ன செய்​துக்​கொண்​டிருக்​கிறது சுகா​தா​ரத்​துறை? இளம்​பிஞ்​சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்​பரம் தேடத் துடிக்​கும் அக்​கறையைக் குழந்​தைகளின் உயிர்​களைக் காப்​ப​தில் கொஞ்​ச​மாவது காட்ட வேண்​டா​மா? குழந்​தைகளுக்​கான மருந்​துகள் தட்​டுப்​பாடின்​றிக் கிடைப்​பதை தமிழக அரசு உடனே உறுதி செய்ய வேண்​டும். இவ்வாறு தெரி​வித்​துள்​ளார்.

தேர்தல் ஆணைய மோதல்

இதே​போல் அவர் வெளி​யிட்​டுள்ள மற்​றொரு பதி​வில், “இந்​தி​யா​வில் உள்ள மூன்று தேர்​தல் ஆணை​யர்​களில் இரு​வர், வாக்​காளர் பட்​டியலில் பெயர்​களைச் சேர்த்​தல், நீக்​குதல், மீண்​டும் சேர்த்​தல் மற்​றும் வாக்​காளர் பட்​டியல் தரவு​களைக் கையாளுதல் போன்ற முடிவு​கள் குறித்து 10 மாதங்​களில் குறைந்​தது 14 முறை முறை​யான ஆட்​சேபனை​களை எழுப்​பி​யுள்​ள​தாக செய்தி வெளி​யாகி​யுள்​ளது.

தங்​கள் கவனத்​திற்கு வராமல் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அவர்​கள் கேள்வி எழுப்​பியதுடன், வாக்​காளர் பட்​டியல் தரவுத்​தளத்தை மத்​திய மயமாக்​கு​வது குறித்​தும் கவலை தெரி​வித்​துள்​ளனர்.

இவை இந்​தி​யா​வின் தேர்​தல் நடை​முறை​யின் வெளிப்​படைத்​தன்மை மற்​றும் நம்​பகத்​தன்மை மீது மிகக் கடுமை​யான கேள்வி​களை எழுப்​பு​கின்​றன.

நமது தேர்​தலின் நம்​பகத்​தன்​மையே கேள்வி​குறி​யாகி​யுள்ள நிலை​யில், தேர்​தல் ஆணை​யத்​திற்கு உள்​ளிருந்தே கேள்வி​கள் எழும் போது, அரசும் இந்​தி​யத் தேர்​தல் ஆணை​ய​மும் மக்​களுக்​குத் தெளி​வான பதில்​களை வழங்​கக் கடமைப்​பட்​டுள்​ளன” எனத்​ தெரி​வித்​துள்​ளார்​.

அரசு மருத்​து​வ​மனை​களில் குழந்தைகள் மருந்து தட்டுப்பாடு: கனிமொழி எம்.பி. புகார்
பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை கொள்முதல் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in