பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை கொள்முதல் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை கொள்முதல் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
Updated on
1 min read

சென்னை: பொங்கல் பண்​டிகைக்​கான வேட்டி - சேலை கொள்​முதல் பணி வரும் டிசம்​பருக்​குள் நிறைவடை​யும் என்று அமைச்​சர் விஜய் பாலாஜி தெரி​வித்​தார்.

சென்​னை, தலை​மைச்​ செயல​கத்​தில் கைத்​தறி, துணிநூல் மற்​றும் கதர் துறை அமைச்​சர் விஜய் பாலாஜி தலை​மை​யில் பொங்​கலுக்கு வேட்​டி, சேலை வழங்​கும் திட்​டம் மற்​றும் முதி​யோர் ஓய்​வூ​திய திட்​டப் பயனாளி​களுக்கு தீபாவளி பண்​டிகைக்கு வேட்​டி, சேலை வழங்​கும் திட்​டம் ஆகிய​வற்​றின் செய​லாக்​கம் குறித்த ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.

அதி​காரி​களுக்கு அறிவுறுத்தல்

இக்​கூட்​டத்​தில், நூல் கொள்​முதல் மற்​றும் வேட்​டி, சேலை உற்​பத்​தி​யின் முன்​னேற்​றம் குறித்து விரி​வாக ஆய்வு செய்​யப்​பட்​டது.

மேலும், குறித்த காலத்​துக்​குள் உற்​பத்​தியை நிறைவு செய்​திட கூடு​தல் தறிகளை இயக்​க​வும், நிர்​ண​யிக்​கப்​பட்ட தரத்​தில் வேட்​டி, சேலை உற்​பத்தி செய்​ய​வும், டிசம்​பர் 2026-க்​குள் வேட்​டி, சேலை உற்​பத்தி மற்​றும் கொள்​முதல் பணி​களை நிறைவு செய்து பொங்​கல் பண்​டிகைக்கு முன் பயனாளி​களுக்கு விநி​யோகம் செய்​யும் வகை​யில் தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழக கிடங்​கு​களுக்கு அனுப்பி வைக்​கு​மாறு அதி​காரி​களுக்கு அமைச்​சர் விஜய் பாலாஜி அறி​வுறுத்​தி​னார்.

இக்​கூட்​டத்​தில், கைத்​தறி, கைத்​திறன், துணிநூல் மற்​றும் கதர் துறை செய​லா​ளர் லில்​லி, துணிநூல் துறை ஆணை​யர் ஷோப​னா, கைத்​தறித் துறை இயக்​குநர் உமாமகேஸ்​வரி மற்​றும் கைத்​தறித் துறை, துணிநூல் துறை, கோ-ஆப்​டெக்ஸ் நிறுவன உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர்.

பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை கொள்முதல் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
காஞ்சியில் கடந்த 23 நாட்களில் 103 பேருக்கு டெங்கு பாதிப்பு: சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in