மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்களா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்களா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
Updated on: 
1 min read

பழநி: இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்களா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

பழநி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், தங்கரதம் இழுத்து வழிபாடு நடந்தினார். முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் விஜய்யின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கும் நற்சான்றாகவும் அத்தாட்சியாகவும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அமையும்.

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. மக்கள் வியக்கும் அளவுக்கு வாக்கு வித்தியாசம் இருக்கும்.

திமுக ஆட்சியில் எந்த பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை. கடந்த 4 மாதங்களில் தான் மழைநீர் வடிகால் பணிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல் முடிவுக்கு பின்பு மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 2027 மார்ச் வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற இருப்பதால் அதுவரை புதிய மாவட்டங்கள் உருவாக வாய்ப்பில்லை.

பழநி மானூர் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது விஷமிகள் செய்த தவறு. தவறு செய்தது யார் என்பதை அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவார்களா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
‘வெற்றி பயணத் திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள்’ - விருத்தாசலத்தில் பிரேமலதா குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in