‘வெற்றி பயணத் திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள்’ - விருத்தாசலத்தில் பிரேமலதா குற்றச்சாட்டு

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

Updated on: 
1 min read

கடலூர்: விருத்தாசலம் தொகுதியில் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “ஒரு எம்எல்ஏவாக பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்று அரசிடம் கொண்டு சேர்க்கிறேன். தொகுதிக்கு எம்எல்ஏ நிதி இன்னும் எனக்கு வரவில்லை. வந்தவுடன் அதைக் கொண்டு பணிகளைத் தொடங்கி விடுவேன். ஒரு திட்டத்தை அரசு நடைமுறைபடுத்தினால், அது மக்களிடம் எப்படி சென்று சேர்கிறது என கவனிக்க வேண்டும்.

ஏற்கெனவே, போக்குவரத்து துறை, மின்சார துறைகள் கடனில் உள்ளன. இதேபோல், ஒவ்வொரு துறையும் கடனை நோக்கிச் செல்கிறது. எல்லாவற்றிற்கும் இலவசம் அறிவிப்பது எதற்கு என்று புரியவில்லை.

வெற்றி பயணத் திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பிரச்சினையில் அரசு நல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விருத்தகிரீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதை மேம்பாடு, மகப்பேறு மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்தும் நேரில் வலியுறுத்த உள்ளேன்” என்று தெரிவித்தார்.

<div class="paragraphs"><p><em>தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்</em></p></div>
திருச்சியில் சரக்கு போக்குவரத்து மையம்: திட்ட அறிக்கை தயாரிக்க டிட்கோ டெண்டர் வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in