சைபர் கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவித்தால் விரைந்து மீட்கலாம்: காவல் ஆணையர் நம்பிக்கை

சைபர் கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவித்தால் விரைந்து மீட்கலாம்: காவல் ஆணையர் நம்பிக்கை
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் குற்​றச் செயல்​களை கட்​டுப்​படுத்​த​வும், சட்​டம்​-ஒழுங்கை பாது​காக்​க​வும் காவல் ஆணை​யர் அமல்​ராஜ் பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார்.

லஞ்​சம் பெறு​வது உள்​ளிட்ட முறை​கேடு​களில் ஈடு​படும் போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்​க​வும் தனிப்​பிரிவு மூலம் கண்​காணிப்பு தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள் அளித்த புகார்​களின் அடிப்​படை​யில், கடந்த ஒரு மாதத்​தில் மட்​டும் 10-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் மீது பணி​யிடை நீக்​கம், காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றம், ஆயுதப்​படைக்கு மாற்​றம் உள்​ளிட்ட நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

மேலும், சென்​னை​யில் பணி​யாற்​றிய 60 போலீ​ஸார் பிற மாவட்​டங்​களுக்கு பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும் 40 போலீ​ஸார் மீதான புகார்​கள் குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

இதுகுறித்து காவல் ஆணை​யர் அமல்​ராஜ் கூறிய​தாவது: பாதிக்​கப்​பட்ட பொது​மக்​கள் தங்​களு​டைய பிரச்​சினை​களை தீர்த்து வைக்க வேண்​டும் என்​ப​தற்​காக போலீ​ஸாரை நாடு​கின்​றனர். அவர்​களிடமே பணம் பெறு​வதையோ, முறை​கேட்​டில் ஈடு​படு​வதையோ ஏற்​றுக்​கொள்ள முடி​யாது.

எனவே, குற்​றச்​சாட்​டு​களுக்கு உள்​ளாகும் காவல்​துறை​யினர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரு​கிறேன். நான் யாரிட​மும் பணம் பெற​மாட்​டேன். காவல்​துறை​யினர் லஞ்​சம் பெற்​றாலும் அவர்​களை விட​மாட்​டேன்.

சைபர் குற்​றங்​கள் குறித்​தும் பொது​மக்​களுக்கு தொடர்ந்து விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டிய அவசி​யம் உள்​ளது. கஷ்டப்​பட்டு சம்​பா​தித்த பணத்தை பொது​மக்​கள் ஒரே நிமிடத்​தில் இழந்து விடு​கின்​றனர்.

சென்​னை​யில் மட்​டும் ஆன்​லைன் மோசடி மூலம் பொது​மக்​கள் ரூ.370 கோடி வரை பணத்தை இழந்​துள்​ளனர். இதில் ரூ.100 கோடி முடக்​கப்​பட்​டுள்​ளது.ரூ.20 கோடி மீட்​கப்​பட்டு உரிய​வர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

பொது​மக்​கள் ஆன்​லைன் மோசடி​யில் பணத்தை இழந்​து​விட்​டால், 24 மணி நேரத்​துக்​குள் 1930 என்ற எண்​ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்​டும். அவ்​வாறு விரை​வாக புகார் அளித்​தால் பணத்தை மீட்​ப​தற்​கான நடவடிக்​கைகளை உடனடி​யாக மேற்​கொள்ள முடி​யும். எனவே, இவ்​வாறு காவல்​ ஆணை​யர்​ அமல்​ராஜ் தெரிவித்​தார்.

சைபர் கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவித்தால் விரைந்து மீட்கலாம்: காவல் ஆணையர் நம்பிக்கை
ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ்களை முழுமையாக டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கு எதிராக வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in