முதுமையில் தேவைப்படும் அன்பை பணம் ஈடுசெய்யாது: நீதிபதி சுந்தர் மோகன் கருத்து

முதுமையில் தேவைப்படும் அன்பை பணம் ஈடுசெய்யாது: நீதிபதி சுந்தர் மோகன் கருத்து
Updated on
1 min read

சென்னை: சென்​னையைச் சேர்ந்​தவர் கோயல் (80). வீட்டு உபயோகப் பொருள் உற்​பத்தி செய்​யும் தொழில் நடத்தி வந்​தார்.

தனது மகன் மீது புகார் கூறி சென்னை குடும்ப நல நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். “எனக்​குச் சொந்​த​மான வீட்டை எழுதி வாங்​கிக்​கொண்ட மகன் சூரஜ், வயதான காலத்​தில் என்னை ஆதர​வின்றி விட்​டு​விட்​டார்.

எனவே மாதாந்​திர பராமரிப்பு செல​வுத் தொகை வழங்க மகனுக்கு உத்தர வேண்​டும்’ என்று அதில் கூறி​யிருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த குடும்ப நல நீதி​மன்​றம், கோயலுக்கு மாதம்​தோறும் ரூ.75 ஆயிரத்தை பராமரிப்​புச் செல​வாக வழங்​க சூரஜுக்கு உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் சூரஜ் மனு தாக்​கல் செய்​தார். மனுவை விசா​ரித்த நீதிபதி சுந்​தர்​மோகன் கூறிய​தாவது:

தனது பிற சொத்​துகள் மூலம் கிடைக்​கும் வாடகை வரு​வாயை மறைத்து குடும்ப நல நீதி​மன்​றத்​தில் கோயல் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

எனவே, பராமரிப்​புச் செல​வுத் தொகை பெற அவருக்கு உரிமை இல்​லை. எனவே, கோயலுக்கு மாதம்​தோறும் ரூ, 75 ஆயிரம் வழங்க வேண்​டும் என்ற கீழமை நீதி​மன்ற உத்​தரவை ரத்து செய்​கிறேன்.

அதே​நேரம், வயதான காலத்​தில் மூத்த குடும்ப உறுப்​பினர்​களுக்​குத் தேவைப்​படும் அன்​பு, ஆதர​வு, அரவணைப்பை பணத்தால் ஈடு​செய்ய முடி​யாது. தந்தை - மகன் இடையே உள்ள பிரச்​சினை​கள் சமரச​மாக பேசி தீர்க்​கப்​பட்​டு, சுமுக உறவு ஏற்​படும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

முதுமையில் தேவைப்படும் அன்பை பணம் ஈடுசெய்யாது: நீதிபதி சுந்தர் மோகன் கருத்து
‘அ​வார்​டு’ நகர் ‘வேடிக்கை தெரு’ சலசலப்பு | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in