“மெட்ரோ திட்டத்தில் திமுகவின் பங்களிப்பை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும்” - ஸ்டாலின் பெருமிதம்

“மெட்ரோ திட்டத்தில் திமுகவின் பங்களிப்பை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும்” - ஸ்டாலின் பெருமிதம்
Updated on: 
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ திட்​டத்​தில் திமுக அரசின் இடத்தை வரலாறு எப்​போதும் நினை​வில் கொள்​ளும் என திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ திட்​டம் கருணாநிதி ஆட்​சி​யில், நான் துணை முதல்​வ​ராக இருந்​த​போது ஜப்​பான் நாட்டின் நிதி​யைப் பெற்​றுத் தொடங்​கப்​பட்​டது. அடுத்து வந்த அதி​முக ஆட்​சி​யில் சுணக்​கம் கண்ட இரண்​டாம் கட்​டப் பணிகளை, 2021-ல் திமுக அரசு பொறுப்​பேற்​றதும் விரைவுபடுத்தினோம். மத்​திய அரசின் பங்​களிப்பு நிதி 3 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்​கப்​ப​டாத நிலை​யிலும், கடுமையான நிதி நெருக்​கடிக்கு இடையே மாநில அரசின் சொந்த நிதியி​லிருந்து ரூ.11,762 கோடி​யும், வெளி​நாட்டு கடனுதவி மூலம் ரூ.6,802 கோடி​ என மொத்​தம் ரூ.18,564 கோடியைச் செலவிட்​டுப் பணி​களைத் தொய்​வின்றி மேற்​கொண்​டோம்.

2024 அக்​டோபரில் நமது கோரிக்கை ஏற்​கப்​பட்டு மத்​திய அரசின் நிதி ஒப்​புதல் பெறப்​பட்​டது. இவ்​வழித்​தடத்தை 2025 இறுதியிலேயே திறக்க அனைத்து முயற்​சிகளும் மேற்கொண்டோம். ஆனால், சிக்​னல் அமைப்​புக்​கான ஒப்​புதலை ரயில்வே வாரி​யம் வழங்​கு​வ​தில் ஏற்​பட்ட தாமதத்​தா​லும், அதைத் தொடர்ந்து சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​த​தா​லும், திட்​ட​மிட்​டபடி திறந்து வைக்க முடி​யாமல் போனது. ஆண்​டுக் ​கணக்​கில் நான் சுமந்து வளர்த்​தெடுத்த சென்னை மெட்ரோ ரயில் எனும் குழந்தை அடி​யெடுத்து வைப்​ப​தில் தாய்மை உணர்​வுடன் பெருமை கொள்​கிறேன்.

1976-ல் கருணாநிதி உரு​வாக்​கிய வள்​ளுவர் கோட்​டத்​தைத் திறக்கும் முன் திமுக அரசு கலைக்​கப்​பட்​டாலும், அதன் வரலாற்றை எவராலும் மறைக்க முடிய​வில்​லை​யோ, அதே​போல சென்னை மெட்ரோ திட்​டத்​தி​லும் திமுக அரசின் இடத்தை வரலாறு எப்​போதும் நினை​வில் கொள்​ளும். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்.

“மெட்ரோ திட்டத்தில் திமுகவின் பங்களிப்பை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும்” - ஸ்டாலின் பெருமிதம்
சென்னை ஓஎம்ஆர் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு கார் உள்ளே விழுந்தது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in