திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின்

கொளத்தூரில் ஏப்ரல் 6-ல் வேட்பு மனு தாக்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated on
1 min read

சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தமி​ழ​கம் முழு​வதும் ஏப்​ரல் 2-ம் தேதி முதல் பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளவுள்​ளார். தொடர்ந்து அவர் கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட ஏப்​ரல் 6-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் செய்​ய​வுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30-ம் தேதி முதல் தொடங்​க​வுள்​ளது. தேர்​தலுக்கு குறைந்த அவகாசமே உள்​ள​தால் அனைத்து அரசி​யல் கட்​சிகளும் தேர்​தல் பணி​களை முடுக்​கி​விட்​டுள்​ளன. திமுக கூட்​ட​ணியை பொறுத்​தவரை காங்​கிரஸ் 28, தேமு​திக 10, விசிக 8, இரண்டு கம்​யூனிஸ்ட்​டு​கள் தலா 5, மதி​முக 4, முஸ்​லிம் லீக், மமக, கொமதேக தலா 2 மற்​றும் எஸ்​டிபிஐ, மஜக, முக்​குலத்​தோர் புலிப்​படை ஆகிய கட்​சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

ஓட்​டுமொத்​த​மாக திமுக​வின் உதயசூரியன் சின்​னத்​தில் 175 தொகு​தி​களில் திமுக மற்​றும் கூட்​டணி கட்​சிகள் போட்​டி​யிட உள்​ளன. தொடர்ந்து கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள் எந்​தெந்த தொகு​தி​களில் போட்​டி​யிடும் என்​பது தொடர்​பாக ஆலோ​சனை நடை​பெற்று வரு​கிறது. மேலும், திமுக தேர்​தல் அறிக்கை மற்​றும் வேட்​பாளர் பட்​டியல் இந்த வாரம் இறு​திக்​குள் வெளி​யிடப்​படும் எனவும் கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், திமுக மற்​றும் கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திரு​வாரூரில் ஏப்​ரல் 2-ம் தேதி முதல் பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ளார். தொடர்ந்து ஏப்​ரல் 3-ம் தேதி ஜெயங்​கொண்​டம், திரு​வெறும்​பூர், ஏப்​ரல் 4-ல் கரூர், திருப்​பூர், 5-ல் நாகர்​கோ​வில், திருநெல்​வேலி ஆகிய தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கி​றார். அதன்​பின் முதல்​வர் ஸ்டா​லின், தான் போட்​டி​யிடும் கொளத்​தூர் தொகு​தி​யில் ஏப்​ரல் 6-ல் வேட்​புமனுவை தாக்​கல் செய்​கி​றார். தொடர்ந்து ஏப்​ரல் 21-ம் தேதி வரை அவர் தமி​ழ​கம் முழு​வதும் பிரச்​சா​ரம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இறு​தி​நாளான 21-ம் தேதி ஸ்ரீபெரும்​புதூர், கொளத்​தூர் தொகு​தி​யில் பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​கி​றார். இதே​போல், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லினும் தமி​ழ​கம் முழு​வதும் தீவிர பிரச்​சா​ரம் செய்​ய​உள்​ளார். இதனால் அடுத்த வாரம் முதல் தேர்​தல் களம் பரபரப்​பாக காணப்​படும் என்று எதிர்ப்​பார்க்​கப்​படு​கிறது.

நெல்லையில் கனிமொழி? - இதற்கிடையே, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மாநில அரசியலில் தடம் பதிக்க விரும்புகிறார். தற்போது தென்மண்டல தேர்தல் பொறுப்பாளராக உள்ள கனிமொழி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறங்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

குடும்ப உறவுகள் மூலம் தலைமையின் ஒப்புதலை பெறும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் வாய்ப்பு கிடைத்தால் கனிமொழி திருநெல்வேலி தொகுதியில் களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

<div class="paragraphs"><p>முதல்வர் மு.க.ஸ்டாலின்</p></div>
பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து பி.எல்.சந்தோஷ் ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in