பாஜக வேட்பாளர் தேர்வு குறித்து பி.எல்.சந்தோஷ் ஆலோசனை

பி.எல்.சந்தோஷ்

பி.எல்.சந்தோஷ்

Updated on
1 min read

​பாஜக வேட்​பாளர் தேர்வு குறித்து கட்​சி​யின் தேசிய அமைப்பு பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் கமலால​யத்​தில் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் பாஜக​வுக்கு 27 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. இந்​தத் தொகு​தி​களில் வலிமை​யான வேட்​பாளர்​களை நிறுத்​து​வது குறித்து பாஜக மத்​திய தலைமை தீவிர​மாக ஆலோ​சித்து வரு​கிறது. இதற்​கிடையே, தமிழக பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை இந்​தத் தேர்​தலில் போட்​டி​யிடப் போவ​தில்லை என்ற தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இது தொடர்​பாகத் தனது நிலைப்​பாட்டை விளக்கி அவர் பிரதமர் நரேந்​திர மோடிக்கு கடிதம் எழு​தி​யிருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

மேலும், கடந்த 2021 தேர்​தலில் 20 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட பாஜக நெல்​லை, நாகர்​கோ​வில், மொடக்​குறிச்சி மற்​றும் கோவை தெற்கு ஆகிய 4 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. ஆனால், இந்த முறை ஒதுக்​கப்​பட்​டுள்ள 27 இடங்​களில், பாஜக​வின் சிட்​டிங் தொகு​தி​களான கோவை தெற்கு மற்​றும் நெல்லை ஆகிய தொகு​தி​கள் மீண்​டும் பாஜக​வுக்கு ஒதுக்​கப்​பட​வில்​லை.

இதன் காரண​மாக, சிட்​டிங் எம்​.எல்​.ஏ-க்​கள் தங்​களின் தொகு​தி​களை மாற்​றும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. அதன்​படி, நயி​னார் நாகேந்​திரன் இந்த முறை சாத்​தூர் தொகு​தி​யிலும், வானதி சீனி​வாசன் கோவை வடக்கு தொகு​தி​யிலும் போட்​டி​யிட வாய்ப்​புள்​ள​தாகத் தெரி​கிறது. இந்​நிலை​யில், 27 தொகு​தி​களுக்​கான வேட்​பாளர் தேர்வு குறித்த உயர்​மட்ட ஆலோ​சனைக் கூட்​டம், தேசிய அமைப்பு பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் தலை​மை​யில் சென்னை கமலால​யத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில் மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மேலிடப் பொறுப்​பாளர் சுதாகர் ரெட்​டி, மகளிர் அணி தேசி​யத் தலை​வர் வானதி சீனி​வாசன், தமி​ழிசை சவுந்​தர​ராஜன் உள்​ளிட்ட முக்​கி​யத் தலை​வர்​கள் கலந்​து​கொண்​டனர். மேலும், தேர்​தலில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​துள்ள மாவட்ட மற்​றும் மாநில நிர்​வாகி​கள் பலரும் இதில் பங்​கேற்​ற​னர். இருப்​பினும், கட்​சி​யின் முக்​கிய முக​மான அண்​ணா​மலை இந்​தக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ள​வில்​லை.

இதற்​கிடை​யில், மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “யார் வேட்​பாளர் என்​பதை கட்​சி​யின் உயர்​மட்​டக் குழு ஆலோ​சித்து முடிவு செய்​யும். இறு​திப் பட்​டியலை டெல்லி தலைமை வெளி​யிடும். அதே​போல், அடுத்த இரண்டு நாட்​களில் கட்​சி​யின் தேர்​தல் அறிக்கை வெளி​யாகும்” என்​றார்​.

<div class="paragraphs"><p>பி.எல்.சந்தோஷ்</p></div>
தே.ஜ. கூட்டணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in