குமாரராஜா முத்தையா பாரம்பரிய கைவினைப்பள்ளி சங்கத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

குமாரராஜா முத்தையா பாரம்பரிய கைவினைப்பள்ளி சங்கத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: சென்​னை​யில் பிரபல​மான செட்​டி​நாடு வித்​யாஷ்ரம் பள்​ளியை நிர்​வகித்து வரும் குமார​ராஜா முத்​தையா பாரம்​பரியக் கலை மற்​றும் கைவினைப் பள்ளி சங்​கத்​தில் கோடிக்​கணக்​கில் முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாக தொடரப்பட்ட வழக்​கில், இது தொடர்​பாக அளிக்​கப்​பட்ட புகார் மீது உடனடி​யாக விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்​னை​யில் உள்ள குமார​ராஜா முத்​தையா பாரம்​பரிய கலை மற்​றும் கைவினைப் பள்ளி என்ற பதிவு பெற்ற சங்க உறுப்​பின​ரான வி.பழனியப்​பன், உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: எங்​களது சங்​கத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் கோடிக்​கணக்​கான மதிப்​பில் சொத்​துகள் உள்​ளன.

வங்கி முதலீடு​களும் அதி​கள​வில் உள்​ளன. கல்வி நிலை​யங்​களும் செயல்​பட்டு வரு​கின்​றன. எங்​களது சங்​கச் செய​லா​ள​ராக பதவி வகித்த குமார​ராணி டாக்​டர் மீனா முத்​தையா கடந்த மே 2-ம் தேதி கால​மா​னார்.

இந்த அசா​தா​ரண​மான சூழலில் சங்க விதி​முறை​களை முறை​யாகப் பின்​பற்​றாமல் கே.டி.ஆர்​.​ராஜா கருப்​பன் செட்டி என்ற கருப்​பையா தனது அடி​யாட்​கள் மூல​மாக சங்க நிர்​வாகத்​தை​யும், கோடிக்​கணக்​கான மதிப்​புள்ள சொத்​துகளை​யும், வங்கி முதலீடு​களை​யும் சட்​ட​விரோத​மாக அபகரிக்​கும் நோக்​குடன் செயல்​பட்டு வரு​கிறார்.

ரூ.800 கோடிக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளார். இது தொடர்​பாக ராஜா கருப்​பன் செட்டி மற்​றும் அவருடன் தொடர்​புடைய நபர்​களுக்கு எதி​ராக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் செட்​டி​நாடு வித்​யாஷ்ரம் உள்​ளிட்ட கல்வி நிலை​யங்​களை நிர்​வகிக்க இடைக்​கால நிர்​வாகியை நியமித்​து, சம்​பந்​தப்​பட்ட ராஜா கருப்​பன் செட்டி உள்​ளிட்ட அவரது ஆதர​வாளர்​கள் சங்​கத்​தின் செயல்​பாடு​களில் தலை​யிடக்​கூ​டாது என்​றும், சட்​ட ​விரோத​மாக பொதுக்​குழுவை கூட்​டக்​கூ​டாது என்​றும் உத்​தர​விட்​டுள்​ளது.

ஆனால், உயர் நீதி​மன்ற உத்​தரவை மீறி ராஜா கருப்​பன் செட்​டி​யும் அவரது ஆதர​வாளர்​களும் தொடர்ந்து சங்​கத்​தின் செயல்​பாடு​களில் தலை​யிட்டு வரு​கின்​றனர்.

எனவே, அவர்​கள் மீது குற்​றச்​ச​தி, போலி ஆவணம் தயாரித்​தல், நம்​பிக்கை மோசடி, சங்​கங்​கள் மற்​றும் அறக்​கட்​டளை நிர்​வாகத்​தில் தலை​யிட்டு குழப்​பத்தை ஏற்​படுத்​துதல், வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​தல் போன்ற குற்​றச்​சாட்​டு​களின் அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்​கக்​கோரி கடந்த மே 26-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணை​யரிடம் புகார் அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் ஜெ.ரவீந்​திரன் ஆஜராகி, கல்வி நிறு​வனங்​களை நடத்​திவரும் இந்த அமைப்​பின் நிர்​வாகம் மற்​றும் கோடிக்​கணக்​கான மதிப்​புள்ள சொத்து விவ​காரங்​களில் ஏற்​பட்​டுள்ள சூழ்​நிலை மாணவர்​களின் நலனை​யும் பாதிக்​கும் அபா​யம் உள்​ள​தாக வாதிட்​டார்.

அதையடுத்து காவல் துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எஸ்.யோக​ராஜா சேகர், ‘‘இது தொடர்​பாக மனு​தா​ரர் அளித்​துள்ள புகார் மீது வரு​வாய் கோட்​டாட்​சி​யர் இன்று (நேற்​று) இருதரப்​பை​யும் அழைத்து விசா​ரணை நடத்தி வரு​கிறார்.

அந்த விசா​ரணை​யின் அடிப்​படை​யில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்’’ என்​றார். இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, மாணவர்​களின் நலன் கருதி மனு​தா​ரர் கடந்த மே 26-ம் தேதி அளித்​துள்ள புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

குமாரராஜா முத்தையா பாரம்பரிய கைவினைப்பள்ளி சங்கத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
குரூப் 2, 2ஏ தேர்வில் காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in