பசும்பொன் தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

194 பயனாளிகளுககு ரூ.79.70 லட்சம் மதிப்பில் நலத்திட்டம்
பசும்பொன் தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
Updated on: 
1 min read

கமுதி: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், மதன்ராஜா, ராஜீவ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அங்கு நடைபெற்ற அரசு விழாவில் ரூ.79.70 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அரசு சார்பில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ், ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் தங்கபாண்டி, கோபிசன், கருப்பையா, குழந்தைராணி நாச்சியார், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியது: “முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் கடந்தாண்டைவிட இந்தாண்டு கூடுதல் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. புதிதாக ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறுகிய நேரத்தில் சென்று முத்துராமலிங்கத் தேவரை தரிசித்து செல்ல முடியும்.

மேலும், இங்கு கூடுதல் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழக முதல்வர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். முதல்வர் விரைவில் பசும்பொன் வருகை தருவார்” என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் கலையரங்கத்தில் அரசு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 194 பயனாளிகளுக்கு ரூ.79.70 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

பசும்பொன் தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
“நிர்வாகிகளின் பணிச் சுமையால் தனித்தனியாக தேவர் சிலைக்கு மரியாதை”- அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

X