“நிர்வாகிகளின் பணிச் சுமையால் தனித்தனியாக தேவர் சிலைக்கு மரியாதை”- அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

“நிர்வாகிகளின் பணிச் சுமையால் தனித்தனியாக தேவர் சிலைக்கு மரியாதை”-  அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்
Updated on: 
1 min read

மதுரை: “கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை. நிர்வாகிகளின் பணிச் சுமையால் தனித்தனியாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறோம்” என அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்திலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி, சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்துவது குறித்து விளக்கமளித்தார்.

பொதுவாக ஒரு கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக வந்து மரியாதை செலுத்துவது வழக்கம் என்றாலும், இந்த முறை காலையில் இருந்து வெவ்வேறு குழுக்களாக வந்து மரியாதை செலுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “கட்சி நிர்வாகிகளுக்கு வெவ்வேறு பணிகள் இருப்பதால் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்துகிறோம். இதனைக் கட்சிக்குள் அணிகளாகப் பிரிந்திருப்பதாகக் கருதக் கூடாது. தங்களுக்குள் எந்தவிதமான வேற்றுமையும் இல்லை. ஒற்றுமையாகச் செயல்படுவதே எங்களது நோக்கம்.

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் அவற்றைச் சரிசெய்து, கடைக்கோடி மக்களுக்கும் அதன் பயன் சென்றடையும் வகையில் முதல்வரின் உத்தரவின்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் முதல்வர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார்” என்று அவர் கூறினார்.

“நிர்வாகிகளின் பணிச் சுமையால் தனித்தனியாக தேவர் சிலைக்கு மரியாதை”-  அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல், பொது வேட்பாளர், ஆதரவு சலசலப்புகளுக்கு சீமான் விளக்கம்

X