அரசு பணிகளை ஆய்வு செய்த அமைச்சரின் அண்ணன்: புதுக்கோட்டையில் ‘ரீல்ஸ்’ எடுத்து வெளியிட்ட நிர்வாகிகள்

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்காக நடந்த முகாமை ஆய்வு செய்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸின் மூத்த சகோதரர் முகமது இப்ராஹிம்.

புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்காக நடந்த முகாமை ஆய்வு செய்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸின் மூத்த சகோதரர் முகமது இப்ராஹிம்.

Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்​கோட்​டை​யில் அரசு முகாமில் அமைச்​சரின் சகோ​தரர் ஆய்வு செய்த விவ​காரம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.இதுதொடர்​பாக நிர்​வாகி​கள் எடுத்து வெளி​யிட்ட ‘ரீல்ஸ்’ சமூகவலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

புதுக்​கோட்​டை​யில் மாவட்ட நிர்​வாகத்​தின் சார்​பில் தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் அவர்​களது குடும்​பத்​தினருக்கு அரசு சேவை​கள் மற்​றும் நலத்​திட்​டங்​களைப் பெறு​வதற்​கான பதிவு முகாம் தனி​யார் திருமண மண்​டபத்​தில் கடந்த 22-ம் தேதி நடை​பெற்​றது.

இந்த முகாமை ஆட்​சி​யர் எம்​.அருணா ஆய்வு செய்​து ​விட்டு சென்ற பின், அங்கு தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸின் மூத்த சகோ​தரர் முகமது இப்​ராஹிம், மாநக​ராட்சி கவுன்​சிலர் சேட் (எ) அப்​துல் ரகு​மான் மற்​றும் கட்​சி​யினர் அங்கு வந்​தனர். அவர்களை மாநக​ராட்சி ஆணை​யர் காந்​தி​ராஜ் அழைத்​துச் சென்று முகாம் குறித்து விளக்​கி​னார்​. அப்​போது, ஆவணங்​களை எடுத்​துப் பார்த்து சில ஆலோ​சனை​களை இப்ராஹிம் கூறி​னார்.

ஆய்​வுப் பணி முடிந்​ததும் புறப்​பட்ட முகமது இப்​ராஹிமை மண்​டபத்​தின் வாசல் வரை சென்று ஆணை​யர் வழியனுப்பி வைத்​தார். இது தொடர்​பான நிர்வாகிகள் எடுத்த ரீல்ஸ் தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. அரசு பணி​களில் கட்சி நிர்​வாகி​கள் ஆய்​வுக்கு செல்​லக் கூடாது. மீறி​னால் நடவடிக்கை எடுக்​கப்​படும் என கட்​சித் தலைமை அறி​வுறுத்​தி​யுள்ள நிலை​யில், புதுக்​கோட்​டை​யில்​ நடை​பெற்​ற இச்​சம்​பவம்​ சர்​ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்காக நடந்த முகாமை ஆய்வு செய்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸின் மூத்த சகோதரர் முகமது இப்ராஹிம்.</p></div>
“போராட்டம் குறித்த என் கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in