“போராட்டம் குறித்த என் கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

Updated on
1 min read

புதுடெல்லி: மாணவர்கள் போராட்டம் மீதான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்த தனது கருத்துகள் ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். 

நீதி வேண்டி வரும் ஒவ்வொரு மனிதருக்கும் உச்சநீதிமன்றத்தின் கதவுகள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்றும், முறைப்படி தாக்கல் செய்யப்படும் எந்தவொரு மனுவையும் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஐநா சர்வதேச வர்த்தக சட்ட ஆணையத்தின் மாநாட்டில் பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், “ஊடகங்கள் மாணவர்கள் போராட்டம் குறித்த எனது கருத்துகளைத் தவறாக மேற்கோள் காட்டியுள்ளன. உச்சநீதிமன்றம் நீதி வேண்டி வரும் அனைவருக்கும் 24 மணி நேரமும் திறந்தே இருக்கிறது. குறைகள் உள்ள எவரும் நீதிமன்றத்தை அணுகலாம்.

ஆனால், அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கான உரிய நடைமுறைகளையும் வடிவத்தையும் பின்பற்றி வர வேண்டும். நீதிமன்ற நடைமுறைகளை நன்கு அறிந்த வழக்கறிஞர்கள் முறையான மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அப்படி வரும் எந்தவொரு வழக்கைக்கும் நாங்கள் மறுப்பு தெரிவிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

அவசர வழக்கைக் காரணம் காட்டி மனுவே தாக்கல் செய்யாமல் முறையிட்ட இளம் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கும் நோக்கில் பேசியதையே ஊடகங்கள் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவசரத் தேவை இருக்கும் பட்சத்தில் சிறப்பு கோரிக்கைகள் உடனடியாகப் பரிசீலிக்கப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை குறிப்பிடப்பட்ட இரு மனுக்கள் வரும் திங்கள்கிழமை (ஜூலை 27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், மாணவர்களின் போராட்டம் மற்றும் சர்ச்சைகள் தொடர்பான பிற கேள்விகளுக்கு நீதிமன்ற விசாரணையின் போது பதிலளிப்பதாக கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

<div class="paragraphs"><p>உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்</p></div>
மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ரவ்னீத் சிங்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in