மக்​கள் குறை​களைத் தீர்க்க நிர்வாகிகளுக்கு அமைச்​சர் சரத்குமார் அறிவுறுத்தல்

அமைச்​சர் சரத்​கு​மார்

அமைச்​சர் சரத்​கு​மார்

Updated on: 
1 min read

தாம்​பரம்: உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​களின் பதவிக்​காலம் விரை​வில் முடிவடைய உள்ள நிலை​யில், நிர்​வாகி​கள் தங்​கள் பகு​தி​களில் உள்ள மக்​களின் குறை​களைக் கேட்​டறிந்​து, அவற்றை அதிகாரிகளின் கவனத்​துக்​குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்​டும் என அமைச்​சர் சரத்​கு​மார் அறி​வுறுத்​தி​னார்.

தாம்​பரம் தொகுதி அலு​வல​கத்​தில் நடை​பெற்ற கட்சி நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்​கு, மனிதவள மேலாண்​மைத்துறை அமைச்​சர் சரத்​கு​மார் தலைமை தாங்​கி​னார். இதில் தாம்​பரம் தொகு​திக்கு உட்​பட்ட பகு​தி, ஒன்​றிய, ஊராட்சி செய​லா​ளர்​கள் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில், கட்சி வளர்ச்​சியை மேம்படுத்துவது, புதிய உறுப்​பினர்​களைச் சேர்ப்​பது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

குறிப்​பாக, உள்​ளாட்​சித் தேர்​தல் விரை​வில் நடை​பெற வாய்ப்புள்ள​தால், நிர்​வாகி​கள் தங்​கள் பகு​தி​களில் உள்ள மக்களுடன் தொடர்​பில் இருக்க வேண்​டும். குடிநீர், சாலை, மின்விளக்​கு, கழி​வுநீர் கால்​வாய் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் தொடர்​பான குறை​களைக் கண்​டறிந்​து, அவற்​றைச் சம்பந்தப்பட்ட அதி​காரி​களிடம் எடுத்​துச் சென்று தீர்வு காண வேண்​டும்.

மக்​களின் தேவை​களை அறிந்​து, விரை​வாக நிவர்த்தி செய்​து அவர்​களின் நம்​பிக்​கை​யைப் பெற வேண்​டும் என அமைச்​சர் வலியுறுத்​தி​னார். மேலும், மக்​கள் நலப் பணி​களுக்கு முக்கியத்துவம் அளித்து நிர்​வாகி​கள் செயல்பட வேண்​டும, புதிய உறுப்​பினர்​களைச் சேர்ப்​ப​தில் தீவிரம் காட்ட வேண்​டும் என்​று​ ஆலோ​சனை வழங்​கி​னார்​.

<div class="paragraphs"><p>அமைச்​சர் சரத்​கு​மார்</p></div>
சைதாப்பேட்டை சிறையில் கைதிகள் திடீர் மோதல்: 27 பேர் புழல் சிறைக்கு மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in